தெய்வமகள் நாயகிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை

சினிமா

 

 

பிரபல தொலைக்காட்சித் தொடரான தெய்வமகளில் சத்யாவாக வரும் வாணி போஜன் தானும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Image result for vani bhojan

திரைக்கு வரும் ஹீரோயின்கள் எவரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகாதவர் என்று சொல்லிவிட முடியாது. அந்தளவிற்கு பல பிரச்சனைகளைத் தாண்டி தான் நடிக்க வருகின்றனர்.

சமீபத்தில் தனியார் அலைவரிசை ஒன்றில் உடைத்து பேசுவேன் என்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் வாணி போஜனும் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை பற்றி பேசிய அவர், தனக்கு சிறு வயதில் நடந்த பாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேசினார்.

தான் 4ம் வகுப்பு படிக்கும் பொழுது தனது தோழி வீட்டிற்கு சென்றாராம். அங்கு தோழியின் தந்தை மாத்திரமே இருந்துள்ளார். தன்னிடம் உன்னுடைய தோழி மேலே மாடியில் தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

தானும் அதனை நம்பி மாடிக்குப் போக பின்னாடியே வந்த அவர் கதவை பூட்டித் தொல்லை கொடுத்துள்ளாராம். இதனால் பயந்து போன தனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.தோழியிடமும் இதனை தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

(famous television serials heroine stirred sexual assault)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *