மிளகு மட்டன் வறுவல்

ஆரோக்கிய சமையல்

தேவையான பொருட்கள் :

வேகவைக்க :
மட்டன் – 1 கப்
உப்பு – தேவைக்கு
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 2
வதக்க :
சோம்பு – 1/2 ஸ்பூன்
குடைமிளகாய் – கால் கப்
(பொடியாக நறுக்கியது )
பெரிய வெங்காயம் – 1
(மெலிதாக நறுக்கியது )
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
கருவேப்பிலை – 2 கொத்து
மிளகு – உங்கள் காரத்துக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு
மிளகாய் சாஸ் – சிறிது

செய்முறை :

1.முதலில் வேகவைக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து மட்டனை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .

2.பிறகு ஒரு கடாயில் ,எண்ணெய் விட்டு , சோம்பு ,பச்சை மிளகாய் , சேர்த்து , பிறகு வெங்காயம் , கருவேப்பிலை ,குடைமிளகாய் சேர்த்து வதக்கவும் .

3.வதங்கும் போது மிளகுத்தூள் ,உப்பு , சேர்த்து கிளறவும் .

4.இதனுடன் வேகவைத்த மட்டன் துண்டுகளை (தண்ணீர் வேண்டாம் ) சேர்த்து நன்கு வதக்கவும் .

5.இறுதியாக மிளகாய் சாஸ் சேர்த்து ,கிளறி இறக்கவும் . வாசனை கமகமக்கும் சுவையான மிளகு மட்டன் ப்ரை தயார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *