ரவா இட்லி |, Rava Idli in Tamil

ஆரோக்கிய சமையல்

 

ரவா இட்லி தேவையான பொருட்கள் ( Ingredients to make Rava Idli in Tamil )

 • 1 1/2 கப் ரவை
 • 1 1/2 கப் தயிர்
 • 1/2 தேக்கரண்டி சோடியம் பைகார்பனேட்
 • 1/4 கப் தண்ணீர்
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 தேக்கரண்டி உங்கள் விருப்பத்திற்கேற்ப வறுத்த முந்திரிபருப்பு/வேர்கடலை
 • 2 தேக்கரண்டி நறுக்கிய கொத்துமல்லி இலைகள்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 1/4 தேக்கரண் டி பொடியாக நறுக்கிய இஞ்சிய

ரவா இட்லி செய்வது எப்படி | How to make Rava Idli in Tamil

 1. ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து தயிர் சேர்த்து 7-8 நிமிடங்கள் கடைந்துகொள்ளவும். இப்போது ரவையை அதனோடு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 2. தொடர்ந்து கலக்கிக்கொண்டே மெதுவாக தண்ணீர் உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலந்து 15-20 நிமிடங்கள் எடுத்து வைக்கவும்.
 3. இப்போது கொத்துமல்லி, இஞ்சி, முந்திரிபருப்பு/வேர்கடலை, சோடியம் பைகார்பனேட் சோடா ஆகியவற்றைச் சேர்த்து சற்றே கலந்துகொள்க.
 4. இட்லி குழிகளில் கொஞ்சம் எண்ணெய் தடவி, ஒரு கரண்டி அல்லது அந்தளவிற்கு இட்லி மாவை ஊற்றி இட்லி குண்டானை பாய்லரில்/குக்கரில் வைக்கவும்.
 5. மூடியிட்டு மூடி 10-12 நிமிடங்கள் வேகவைக்கவும். பிரஷர் குக்கர் பயன்படுத்தினால் விசில் இல்லாமல் அதே நேரத்திற்கு வேகவைக்கவும். சூடான இட்லிகளை சாம்பார் அல்லது தேங்காய் சட்னியோடு பரிமாறவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *