பொங்கல் ஸ்பெஷல் கரும்புச்சாறு பொங்கல், pongal 2019 ,pongal recipes ,pongal festival ,pongal avial, pongal a rice dish, pongal celebration

ஆரோக்கிய சமையல்

பச்சரிசி – அரை கப்

பாசிப்பருப்பு – கால் கப்
பேரீச்சை – 10
கரும்புச்சாறு – 1 கப்
நெய் – சிறிதளவு
முந்திரி பருப்பு – 10

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

செய்முறை :

பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் பாசிப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.

பின்னர் அதனை பச்சரிசியோடு சேர்த்து நீரில் கழுவி குக்கரில் கொட்டவும்.

அதனுடன் கரும்புச் சாறு மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

நான்கு விசில் வந்ததும் இறக்கி ஆறவைக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் முந்திரி, ஏலக்காய்த்தூள், பேரீச்சை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.

பின்னர் அதனை பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கி ருசிக்கவும்.

சூப்பரான கரும்புச்சாறு பொங்கல் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *