தலைமுடி நன்கு வளர இதுவரை நீங்கள் முயற்சித்திராத சில வழிகள்!.,Hair grow well tamil tips

அழகுக் குறிப்புகள்

 

தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி வீட்டிலேயே பராமரிப்பு கொடுப்பது தான். தற்போது பலரும் தங்களின் முடியை அழகாக வெளிக்காட்ட, கலரிங், ப்ளீச்சிங், ஹேர் ட்டையர், ஸ்ட்ரைட்னர் போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். இதனால் முடி ஆரோக்கியத்தை இழந்து, உதிர ஆரம்பிக்கிறது. மேலும் முடி அதிகமாக உடையவும் செய்கிறது. எனவே இதனைத் தவிர்க்க வேண்டுமானால், மேற்கூறிய செயல்களைத் தவிர்ப்பதோடு, வாரம் ஒருமுறை வீட்டிலேயே ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுக்க வேண்டும். இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு தலைமுடியைப் பராமரிப்பதால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். இங்கு இதுவரை நீங்கள் முயற்சித்திராத சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

முட்டை + ஆலிவ் ஆயில்
2-3 முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் 5-6 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, தலைமுடியில் தடவி ஷவர் கேப் கொண்டு தலையைச் சுற்றிக் கொண்டு, 1 மணிநேரம் கழித்து அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் உள்ள சருமத்துளைகள் திறக்கப்பட்டு, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் முறையாக கிடைத்து, தலைமுடியின் வளர்ச்சி நன்கு அதிகரிக்கும்.

ரோஸ்மேரி + ஆப்பிள் சீடர் வினிகர் + தண்ணீர்
இந்த கலவையும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும், வலிமையையும், வளர்ச்சியையும் மேம்படுத்தும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது ரோஸ்மேரி எண்ணெயை சேர்த்து கலந்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி 2-3 நாட்கள் வைத்து, தலைக்கு ஷாம்பு போட்டு அலசியப் பின், இந்த கலவையால் தலைமுடியை அலச, முடியின் பொலிவும், மென்மையும் அதிகரிக்கும்.

சீமைச்சாமந்தி டீ + ஆப்பிள் சீடர் வினிகர்
3 சீமைச்சாமந்தி டீ பையை சூடான நீரில் 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் டீ பையை எடுத்துவிட்டு, அத்துடன் ஆப்பிள் சீடர் வினிகர் சிறிது ஊற்றி கலந்து, தலைமுடியை அலச, முடியின் பொலிவு மற்றும் மிருதுத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் வளர்ச்சியும் மேம்படும்.

வாழைப்பழம் + எலுமிச்சை + தேன்
நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச, தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

நறுமணமிக்க எண்ணெய்கள்
தலைமுடி அதிகம் உதிர்வதைத் தடுக்க, நறுமணமிக்க எண்ணெய்களான அவகேடோ அல்லது ஜொஜோபா எண்ணெய்களை நேரடியாக ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் எந்த ஒரு ந்றுமணமிக்க எண்ணெயை பயன்படுத்தும் முன், சரியான நிபுணர்களிடம் கலந்தலோசித்துக் கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *