பிக் பாஸ் 3: காம் டவுண் சொல்லியே கடுப்பேத்திய மீரா.. ஓவியாவாக மாறிய லாஸ்லியா.. கதறி அழுத ரேஷ்மா! , bigg boss 3 tamil day 4 episode,bigg boss 3 tamil

சினிமா

 

போட்டியாளர்கள் எல்லோரும் உற்சாகமாகவே நடனமாடினார். ஆரஞ்சு கலர் பாவாடை கட்டிக் கொண்டு யாரது புது போட்டியாளரா என கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தால், அட அது நம்ம பாத்திமா பாபு. புதிதாக வந்த மீரா நன்றாக நடனம் ஆடினார். இதையடுத்து தபால் பாக்ஸிற்கான பெல் அடிக்க, அதில் மோகன் வைத்யா வீட்டில் உள்ள அனைவருக்கும் குத்து டான்ஸ் கற்றுக் கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனை ஏற்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மோகன் வைத்யா நடனம் கற்றுக் கொடுக்கிறார்.
அனைவரும் ஜாலியாக ஆடுகின்றனர். பின்னர் மதுமிதா தனது கணவருக்கு ஹேப்பி பர்த்டே கூறுகிறார். bigg boss 3 tamil day 3 episode attracts the viewers பின்னர் ஹாலில் இருந்த கீரை கப்பை எடுத்துக் காட்டி, அதை யார் இங்கே வைத்தது என விசாரிக்கிறார். அப்போது புதிய பிரச்சினைக்கு வெல்கம் சொல்கிறார் அபிராமி. அப்போது வாண்டடாக வண்டியில் ஏறும் மீரா, அபிராமிக்கு காம் டவுண் சொல்கிறார். இதனால் மீராவிற்கும், அபிராமிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது நாம் டிரெய்லரில் பார்த்த காட்சிப்படி’உன்கிட்ட பேசப் பிடிக்கவில்லை’ என்று அபிராமி கிளம்பிச் செல்கிறார்.
அபிராமியோ, மீராவோ அல்லது வேறு போட்டியாளர்களோ என யாருமே புகார் கூறாவிட்டாலும், நாட்டாமை மகள் வனிதா, தானாக பிரச்சினைக்கு ஒரு தீர்ப்பு சொல்வதாக காட்சிக்குள் வருகிறார். அப்போது அவரையும், ‘காம் டவுண்’ சொல்லியே கடுப்பேத்துகிறார் மீரா. திரும்பத் திரும்ப சொல்ற நீ என்ற வடிவேல் பட டயலாக் ரேஞ்சுக்கு வனிதா சொல்வதற்கெல்லாம், ‘காம் டவுண்’ என்ற ஒத்த வார்த்தையிலேயே கோபத்தை மூட்டுகிறார்.
சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு, மீரா ஒருபுறம் அழ, அபிராமி மறுபுறம் அழ என ஆளாளுக்கு பீல் பண்ணுகின்றனர். மீராவை பாத்திமா பாபுவும், அபிராமியை வனிதாவும் சமாதானம் செய்கின்றனர். அப்போது அபியை சமாதானப்படுத்த கவின் வருகிறார். இதனால் சோகக் காட்சி கலகலப்பாகிறது. அதனைத் தொடர்ந்து, சொகுசு பட்ஜெட்டிற்கான அறிவிப்பு செய்கிறார் பிக் பாஸ். டாஸ்க் ரூமில் அனைத்து போட்டியாளர்களும் அமர்ந்திருக்க, ஒவ்வொருவராக எழுந்து சென்று அங்குள்ள குவளையில் இருந்து மூன்று சீட்டுகளை எடுத்து, அதில் எழுதியுள்ள படி செய்ய வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க்.
bigg boss 3 tamil day 3 episode attracts the viewers ஏற்கனவே, மோகன் வைத்யா பிக் பாஸ் வீட்டில் அழுது தனது சோகக் கதையைக் கொஞ்சம் சொல்லியுள்ளதால், அவரையே முதல் ஆளாக்குகிறார் பிக் பாஸ். அவரும் தன் மாற்றுத்திறனாளி மனைவி மற்றும் மகன் பற்றி உருக்கமாகப் பேசி அனைவரையும் அழ வைத்தார். அதையடுத்து ரேஷ்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவரும் தனது வாழ்வில் நடந்த சோக சம்பவங்கள் பற்றி பேசினார். இன்றைக்கு போட்டியாளர்களை அழ வைத்தது போதும் என நினைத்தார் போலும், அடுத்ததாக ஷெரீனுக்கும், அபிராமிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே ஓவியா மாதிரியே லாஸ்லியாவும் கேமரா முன் நின்று கொஞ்ச நேரம் பாடிக் காட்டினார். பின்னர் ‘ஸ்பிரே அடிச்சுப் புடுவேன்’ மாதிரி,

கண்டது போதும் என இலங்கைத் தமிழில் கதைத்தார். இப்படியாக பிக் பாஸ் வீட்டின் மூன்றாம் நாள் நிறைய அழுகை, சோகம், சண்டை, கொஞ்சமாய் காதல், சிரிப்பு என கலவையாக முடிந்தது. எப்படியும் நான்காம் நாளில் சேரன், வனிதா, பாத்திமா பாபு, சரவணன் போன்றோர் டாஸ்க்கில் பேசுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *