50 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனிதர் மீண்டும் உயிருடன் திரும்பி வந்த அதிசயம்

சினிமா

 

 

50 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக புதைக்கப்பட்ட நபர்.. மீண்டும் உயிருடன் திரும்பி வந்த அதிசயம் அனைவரையும் ஆச்சர்ய பட வைத்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சன்னா ஏரண்ணா. இவர் 50 ஆண்டுகளுக்கு முன் 30வது வயதில் இறந்துவிட்டார். உறவினர்கள் அனைவரும் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் 50 ஆண்டுகள் கழித்து, தற்போது உயிருடன் மீண்டும் திரும்பி வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆந்திராவில் சுய நினைவை இழந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் இறந்து போன ஏரண்ணா தோற்றத்தில் இருந்ததால் அவரை பற்றி விசாரித்துள்ளனர்.

அதற்கு அவர் தான் யாரென்ற தெரியாது நினைவுகள் இல்லை என கூறியுள்ளார். அதன் பின் இது ஏரண்ணாவாக தான் இருக்கும் என எண்ணி அவரை குடும்பத்தினர்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, ஏரண்ணா வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம், கொஞ்சமாக பழைய நினைவுகள் வர தொடங்கியுள்ளது. இதைக் கண்டு அவரது குடும்பத்தினர் ஆச்சர்யமடைந்து அவரை தங்களுடனேயே வைத்துக்கொண்டனர்.

தற்போது ஏரண்ணா 80வது வயதில் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து அவரது மனைவியின் சொந்த ஊரான சித்ரநாயக்கனஹள்ளி என்ற பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

இறந்ததாக எண்ணிய ஏரண்ணா எப்படி அதிலிருந்து மீண்டு வந்தார். அங்கிருந்து எப்படி ஆந்திரா சென்றார் என்ற விபரங்கள் கிடைக்காமல் மர்மாகவே உள்ளது. இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *