5 பெண் பிள்ளைகள்….. தூங்கிகொண்டிருந்த மனைவியை கொலை செய்தது ஏன்? கணவன் வாக்குமூலம்

சினிமா

பஞ்சாப் மாநிலத்தில் ஐந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்த மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அனந்த்பூர் சாஹிப் என்ற இடத்தை சேர்ந்த ராகேஷ் குமார் என்பவரின் மனைவி அனிதா ராணி. இவர்களுக்கு திருமணமாகி 4 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், ஐந்தாவதாக ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

மூத்த மகளுக்கு 14 வயதும், இளைய மகளுக்கு நான்கு மாதமும், மற்ற குழந்தைகளுக்கு முறையே 12, 10 மற்றும் எட்டு வயதாகிறது. இந்நிலையில் ஐந்தாவதாக பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார் அனிதா.

ஒரு ஆண் குழந்தை கூட பெற்றுக்கொடுக்காத மனைவி மீது கோபத்தில் இருந்த ராகேஷ், குழந்தைகளை ஒரு அறையில் படுக்கவைத்துவிட்டு, தூங்கிகொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 43 வயதாகும் ராகேஷ் குமார், தங்களுக்கு ஐந்தாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக தனது மனைவி அனிதா ராணியை கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது மனைவியை கொன்ற பிறகு, கழுத்தை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த ராகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *