25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் முன்னணி நடிகருக்கு ஹீரோயினாகும் நடிகை மீனா.! – யாருடன் என தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!

சினிமா

நடிகர் ரஜினிகாந்த் ‛தர்பார்’ படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த படத்தில், ரஜினியின் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
ரஜினிக்கு ஜோடியாக கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதில் சில சீனியர் நடிகைகளின் பெயர் அடிபட்டு வருகிறது.
ஏற்கனவே நடிகை குஷ்பு இந்தப்பட்டியலில் உள்ளார். இந்நிலையில் நடிகை மீனாவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர் தான் நடித்துள்ள கரோலின் காமாட்சி என்கிற வெப் சீரிஸின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது, அவரிடம் ரஜினி படத்தில் நடிக்கிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், மறுப்பு எதுவும் தெரிவிக்காமல், இது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது என்றார். இதன் மூலம், அந்த படத்தில் அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
மேலும், பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டும் என்றும் மீனா விரும்புகிறார் என தெரிகிறது. ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் ‛அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் நடித்த மீனா, அதன்பிறகு ‛எஜமான், வீரா, முத்து’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தார்.
அதன் பிறகு குசேலன் படத்தின் ரஜினியின் நண்பனாக வரும் பசுபதியின் மனைவியாக நடித்தார். இப்போது, மீண்டும் ரஜினிகாந்திற்கு ஜோடியாகவுள்ளார்  மீனா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *