4 ஆண்டுகள் குப்பை அள்ளிய சிறுவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் : நெகிழ்ச்சி சம்பவம்!!

உடற்பயிற்சி

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் நான்கு ஆண்டுகள் குப்பை அள்ளி தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

அதுமட்டுமின்றி அப்போது இருந்த அவுஸ்திரேலியா அணி போன்று உலகில் எந்த கிரிக்கெட் அணியும் இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த மேக்ஸ் என்ற சிறுவன், இந்த கிரிக்கெட் போட்டியை பார்த்ததால், அவருக்கு கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் அதிகமாகிவிட்டது.

இதனால் அவுஸ்திரேலியா அணி விளையாடும் போட்டி, அதிலும் குறிப்பாக ஆஷஸ் டெஸ்ட் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதால், அந்த போட்டியை காண வேண்டும் என்று தன்னுடைய அப்பாவிடம் கூறியுள்ளான். ஆனால், அவர் அப்பாவோ 1500 டொலர் சம்பாதித்து கொடுத்தால், உன்னை நிச்சயமாக இங்கிலாந்திற்கே அழைத்துச் சென்று கிரிக்கெட் போட்டியை காண வைப்பேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட சிறுவன் உடனடியாக தன் அம்மாவிடம் இது குறித்து ஆலோசித்துள்ளான். அதன் படி வார இறுதி நாட்களில் தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் வீடுகளின் குப்பையை எடுத்து செல்ல அவர்களுக்கு உதவுவது என்று முடிவு செய்துள்ளான்.

அதன் படி ஒரு வீட்டிற்கு ஒரு டொலர் வீதம் வாங்கியுள்ளான். இப்படி சுமார் நான்கு ஆண்டுகள் கழிந்துவுட்ட நிலையில், சிறுவன் மேக்ஸ் இப்போது 1500 டொலர் சம்பாதித்துவிட்டான். இதனால் நான் சொன்னதை மகன் செய்துவிட்டான் என்றவுடன், அவர் அப்பா குடும்பத்தினருடன் இங்கிலாந்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

அதன் படி தற்போது நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியை பார்க்க குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதை அறிந்த அவுஸ்திரேலியா வீரர்கள், நமக்கு இப்படி ஒரு ரசிகனா என்று அறிந்து சிறுவனை அழைத்து சிறப்பு அந்தஸ்து கொடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியா ஜாம்பவான் ஸ்டீவ் வாக் மற்றும் அவுஸ்திரேலியா அணி பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோருடன் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பு சிறுவனுக்கு கிடைத்தது. அதை புகைப்படமாக எடுத்து ஸ்டீவ் வாக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அதோடு மட்டுமின்றி, அவுஸ்திரேலியா அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான திட்டம் குறித்து வைக்கும் குறிப்பு புத்தகத்தை அவனிடம் அளித்து என்ன திட்டம் என்பதை பார்க்க வைத்தார். இதை அவுஸ்திரேலியா வீரர்கள் கூட அதை பார்க்க முடியாது எனும் நிலையில் மேக்ஸ்க்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.


மேக்ஸிற்கு அவுஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாட் கம்மின்ஸ் மிகவும் பிடிக்கும் என்பதால், அவர்களுடன் பேசும் வாய்ப்பும் சிறுவனுக்கு கிடைத்துள்ளது, அவர்கள் போட்டிக்கு முன்னர் எப்படி தயாராகின்றனர் என்பதையும் மேக்ஸ் பார்த்துள்ளான்.

நான்கு ஆண்டுகள் உழைத்து போட்டியை பார்க்க ஆசைப்பட்ட மேக்ஸ், அதையும் தாண்டி அவுஸ்திரேலியா அணியுடன் பயணிக்கும் வாய்ப்பையும் பெற்றது உண்மையில் நெகிழ்வான சம்பவம் என்று இணையவாசிகள் பலரும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *