39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர்..! குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

சினிமா

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்தவர் ஜியோனா சானா.

இவருக்கு 70 வயதாகும் நிலையில், தனது 39 மனைவிகளுடன் பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

விலைவாசியால் ஒரு மனைவியை வைத்தே குடும்பம் நிகழ்ந்த கஷ்டப்படும் இன்றைய காலத்தில் இவர் 39 மனைவிகளுடன் வாழ்ந்து வருவதை பலரும் அதிசயமாகவே பார்க்கின்றனர்.

காரணம், ஜியோனா சானாவிற்கு 39 மனைவிகள் மூலம் 94 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது இவர் வீட்டில், 14 மருமகள்களும், 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், தனது குடும்பத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய ஜியோனா சானா, தனது அடுத்த திருமணத்திற்காக பெண் பார்க்கத் தொடங்கியுள்ளார்.

திருமணத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜியோனா சானா, தனது மனைவிகளுக்கு அறைகளை ஒதுக்குவதில் கவனமாக இருக்கிறார்.

தனது பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தனது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை அவர் கட்டியுள்ளார்.

அதில், இளம் மனைவிகளை, தனது பிரத்யேக படுக்கை அறைக்கு பக்கத்தில் உள்ள அறைகளிலும், வயதான மனைவிகளை, தனது மாளிகையின் ஒதுக்குப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மற்ற அறைகளிலும் தங்க வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நான் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால் தான், என்னை கவனித்துக் கொள்வதற்காக ஏராளமான சொந்தங்களை எனக்கு கொடுத்துள்ளார்.

நான், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்’ என்று கூறியுள்ளார் ஜியோனா சானா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *