“3 வருசமா ஒரு பெண்ணோட உறவில் இருந்தேன்”.. லாஸ்லியாவுக்கு ஷாக் தந்த கவின்.. அப்போ பிரேக் அப்-ஆ?

சினிமா

சென்னை: தான் ஒரு பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக உறவு வைத்திருந்ததாக லாஸ்லியாவிடம் கவின் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின். முதலில் சாக்ஷியுடன் நெருக்கமாக பழகிய கவின், பின்னர் லாஸ்லியாவிடம் நெருக்கமாக பழகி வருகிறார்.

முக்கோண காதல் கதை பிரச்சினையில் முடிந்ததைத் தொடர்ந்து, லாஸ்லியா – கவின் காதல் கதை தான் தற்போது பிக் பாஸ் வீட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கமல், சேரன், வனிதா என பலரும் கவினையும், லாஸ்லியாவையும் கண்டித்துவிட்டனர். ஆனால் இருவரும் மாறுவதாக இல்லை.

 

மைக் விவகாரம் இரவு நெடுநேரம் வரை கவினுடன் பேசிவிட்டு தான் லாஸ்லியா உறங்கப் போகிறார் என்பது சக ஹவுஸ்மேட்ஸ்களின் குற்றச்சாட்டு. அதை நிரூபிக்கும் வகையில் கடந்த வாரம் ஒரு நாள் இரவு கவினும், லாஸ்லியாவும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மைக் பேட்டரிகளை கழட்டி வைத்துவிட்டு இருவரும் பேசியதை கமல் உள்பட அனைவரும் கண்டித்தனர்.

இருவரும் மாறவில்லை இதையடுத்தாவது அவர்கள் இருவரும் மாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய புரொமோ வரை அவர்கள் மாறவில்லை. ஏற்கனவே லாஸ்லியாவுடனான உறவில் தான் தீவிரமாக இருப்பதாக கவின் தெரிவித்திருந்தார்.

ஷாக் தரும் கவின் இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது புரொமோவில், லாஸ்லியாவும், கவினும் வெளி சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, தான் ஒரு பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக உறவு வைத்திருந்ததாக லாஸ்லியாவிடம் கூறுகிறார் கவின். பிறகு அந்த பெண் தன்னை பிரிந்து சென்றுவிட்டதாகவும், இதுகுறித்து யோசித்துக்கொள் என்றும் லாஸ்லியாவிடம் சொல்கிறார் கவின்.

நல்லவன் வேடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை. ஆனால் இந்த விஷயம் ஹவுஸ்மேட்ஸ்க்கு தெரியாது. அவர்களை பொறுத்த வரை கவின், முகென், வனிதா, ஷெரீன் ஆகிய நான்கு பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவே மக்களிடம் நல்லப் பெயர் வாங்க கவின், இப்படி நல்லவர் வேடம் போடுவதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

முறிந்தது காதல் கவின் ஆர்மியை சேர்ந்தவர்களோ, அவரது நல்ல உள்ளத்தை பாராட்டி வருகின்றனர். எது உண்மை என்பது பிக் பாஸ்க்குகே வெளிச்சம். ஆனால், லாஸ்லியா சோகமாக அமர்ந்திருப்பதால், இந்த காதலை அவர் முறித்துக் கொள்வாரோ என்ற சந்தேகமும் நெட்டிசன்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *