3 மனைவிகளுக்கு தெரியாமல் நான்காவது பெண்ணுடன்… கையும் களவுமாக சிக்கிய அஜித்குமார்

சினிமா

 

 

கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் மூன்று மனைவிகளுக்கு தெரியாமல் நான்காவது திருமணம் செய்யவிருந்த நிலையில், பொலிசார் கைது செய்தனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (47). இவர் சென்னை சாலிகிராமம் காந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு பெண்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மனைவி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு அஜித்குமார், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து தேவிகா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு 2-ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மகன் இருக்கிறான்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி கேரளாவில் மனைவி, குழந்தைகள் இருப்பது தேவிகாவிற்கு தெரியவந்தது.

இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அஜித்குமார் தேவிகாவை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்தார்.

மேலும் அந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார்.

இதையறிந்த தேவிகா, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து திருமணம் ஆனதை மறைத்து மோசடியில், ஈடுபட்டு 4-வது திருமணம் செய்ய முயன்ற அஜித்குமாரை பொலிசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ், கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவரை விசாரணை செய்த நீதிபதி, ஜாமீனில் விடுவித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *