2019 ல் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்! கல்யாண கொண்டாட்டம் ஒரு பார்வை

சினிமா

திருமணம் ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வு. அவரவர் வசதிக்கு தகுந்தார் போல் திருமணம் செய்யும் நிலை மாறி ஆடம்பரமாக நடத்தப்படுகிறது.

அதே வேளையில் சினிமா பிரபலங்களின் திருமணம் என்றால் கூடுதலான எதிர்பார்ப்பும், பிரம்மாண்ட ஏற்பாடுகளும் இருக்கும்.

இந்த வருடம் நிறைய பிரபலங்கள் திருமணம் பந்தத்தில் இணைந்துள்ளார்கள். யார், யாருடடைய திருமணம் நடைபெற்றது என ஒரு பார்வை பார்க்கலாம்..

முதல் திருமணமே ஃபிப்ரவரி மாதத்தில் என கூறலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா நடிகரும் தயாரிப்பாளருமாக விசாகன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

அதே மாதத்தில் பிக்பாஸ் மதுமிதா தனது மாமாவும் மருத்துவருமான மோசஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மார்ச் மாதம் நடிகர் ஆர்யா சயீஷா திருமணம் தான். மார்ச் மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இருவரும் சினிமா நடிகர், நடிகை என்பது கூடுதல் ஸ்பெஷல்.

இயக்குனர் விஜய் மருத்துவரான ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஜூலை மாதம் 2 ம் திருமணம் செய்து கொண்டார்.

ஆகஸ்ட் மாதம் பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான அனிதா சம்பத் பரபரப்பில்லாமல் திருமணம் நடைபெற்றது.

செப்டம்பர் மாதம் செம்பருத்தி சீரியல் நடிகை ஜெனிஃபர், காதலர் சரவணனை திருமணம் செய்து கொண்டார்.

அதே மாதம் பிக்பாஸ் பிரபலம் பாடகி ரம்யா நடிகர் சத்யாவை திருமணம் செய்துகொண்டார்.

நந்தினி சீரியல் நித்யா ராமுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த கௌதம் என்பவருடன் திருமணம் முடிந்தது.

சரவணன் மீனாட்சி சீரியல் மைனா நந்தினி நடிகர் யோகேஷ்வரனை நவம்பரில் திருமணம் செய்துகொண்டார்.

டிசம்பர் மாதம் காமெடி நடிகர் சதீஷ் இயக்குனர் சாச்சியின் தங்கையான சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

உதயம் NH4 நடிகை அர்ஷிதா ஷெட்டி கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டேவை திருமணம் டிசம்பரில் நடைபெற்றது.

சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் திவாகர், அபி மற்றும் நடிகை ரிச்சா கங்கோபத்யாய் ஜோ ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *