15 நாளில் எடை குறைக்கும் சவால்: எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் எத்தனை நாளுக்கு ஒருமுறை ஹோட்டலில் சாப்பிடலாம்?

உடல் ஆரோக்கியம்

15 நாட்களில் எப்படியெல்லாம் எடையைக் குறைக்க முடியும் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். அதில் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது வீட்டு சாப்பாட்டின் முக்கியத்துவம். அதற்காக வெளியில் சாப்பிடவே கூடாதா என கேட்கலாம். சாப்பிடலாம். ஆனால் எவ்வளவு நாளுக்கு ஒருமுறை சாப்பிடலாம் என்பது குறித்து இங்கு ஆலோசிக்கலாம்.

​15 நாளில் எடை குறைய

இதுவரை நாங்கள் கூறிய நான்கு விதிகளை நீங்கள் கடைபிடிக்க ஆரம்பித்து இருப்பீர்கள். இதோ உங்களுக்கான 5 வது தீர்மானம். இப்பொழுது எல்லாம் டிஜிட்டல் உலகில் இருக்கிறோம். வீட்டில் இருந்த படியே நம்மளுக்கு தேவையானது வீடு தேடி வருகிறது. ஜெஸ்ட் ஒன் க்ளிக் பாஸ்ட் டெலிவரி. இதன் விளைவை என்றாவது யோசித்து இருக்கீங்களா? உடல் உழைப்பே இல்லாமல் உட்கார்ந்த இடத்தில் சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம். கொஞ்சம் தூரம் நடந்து போய் ஹோட்டலில் சாப்பிடக் கூட நம்மால் முடியவில்லை. ஏகப்பட்ட உணவு ஆப்கள் கொட்டிக் கிடக்கின்றன. மக்களுக்கு இது செளகரியமாக இருப்பதால் வாரத்திற்கு ஏன் தினசரி கூட ஹோட்டல் சாப்பாடு சாப்பிட தயாராகி விடுகிறார்கள். உங்களுக்கே தெரியாமல் உடல் நலம் கெடுகிறது என்பதை உணருங்கள்.

​என்ன செய்யலாம்?

இந்த புத்தாண்டில் புதியதொரு தீர்மானம் எடுங்கள். உங்கள் உடல்நலத்தை கெடுக்கும் உணவு ஆப்களை முதலில் டெலிட் செய்யுங்கள். இது தான் உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் மூலாதாரம். இவை உங்கள் பசியை போக்க உதவி செய்தால் கூட பின்னால் இருக்கும் ஆபத்தை உணர்வது நல்லது. இப்பொழுது எல்லாம் வீட்டில் சமைப்பதே இல்லை. குடும்பஸ்தர் முதல் பேச்சுலர் பசங்க வரை எல்லாரும் ஹோட்டலில் ஆர்டர் செய்து தான் சாப்பிடுகிறோம். இதன் விளைவு இளம் வயதிலேயே உடல் பருமன், இதய நோய்கள் தொற்றிக் கொள்கிறது.

காலை வெறும் வயிற்றில் எலுமிச்சை நீருடன் மிளகு சேர்த்து குடிச்சா எப்படி எடை குறையும் தெரியுமா? நீங்களே பாருங்க…

​என்ன சாப்பிடலாம்?

இந்த புத்தாண்டில் 5 வது தீர்மானத்தை எடுங்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியில் சாப்பிட வேண்டும் என்று கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும். உங்கள் சமையலறை வழியாக ஆரோக்கியமான உணவை பாருங்கள். டெக்னாலஜி வழியாக உணவை பார்ப்பது உடலுக்கு நல்லது அல்ல. பெரும் தீங்கானது. பசி எடுத்ததும் பீட்சா, பிரஞ்சு ப்ரை, சிக்கன் என்று எல்லாம் ஆரோக்கியமற்ற உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம். இதற்குப் பதிலாக வீட்டில் காய்கறிகள், கீரைகள் என்று ருசியாக ஆரோக்கியமான உணவுகளை சமைக்க பழகுங்கள்.

​​ஹோட்டல் சாப்பாடு

எந்தவொரு உணவகமும் எவ்வளவு ஆரோக்கியமான சமையல்காரர்களாக இருந்தாலும், உங்கள் வீட்டில் சமைத்த உணவை விட இது ஒருபோதும் சிறப்பாக தயாரித்து தர முடியாது. எனவே இந்த புத்தாண்டில் இருந்து சின்ன மாற்றத்தை தொடங்குங்கள். உணவு ஆப் இனி வேண்டாம், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளி சாப்பாடு, மார்க்கெட்டுக்கு செல்லுங்கள், விதவிதமான பிடித்த காய்கறிகளை வாங்குங்கள். வீட்டில் சுத்தமாகவும், சுவையானதாகவும் சமைத்து சாப்பிடுங்கள். இந்த உணவு பயன்பாட்டு செயலிகளின் கவர்ச்சிக்கு மயங்காதீர்கள். வேண்டும் என்றால் நேரடியாக ஹோட்டல் சென்று சாப்பிடுங்கள்.

​ஆரோக்கியமாக வாழ

வெளியில் இருந்து ஆர்டர் செய்யும் இந்த தீய சுழற்சியில் நம்மில் நிறைய பேர் சிக்கித் தவிக்கிறோம், வெளியேற வழி இல்லை என்று நம்மில் பெரும்பாலோர் உணர்கிறோம். ஆனால் இந்த புத்தாண்டு அதற்கு ஒரு விடிவு காலமாக அமையட்டும். நண்பர்களுடன், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சமைத்து சேர்ந்து உட்கார்ந்து வயிறார சாப்பிடுங்கள். அதுவே நம் பண்பாடும் ஆரோக்கியமும் கூட. உணவு பசியை ஆற்ற மட்டுமல்ல நம் ஆரோக்கியத்திற்கு உலை வைக்காததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *