14 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முச்சக்கரவண்டி சாரதி..!! இந்த சம்பவம் எங்கு நடந்தது தெரியுமா?

குற்றம்

வவுனியாவில் தாண்டிக்குளம் பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியிலிருந்து கிடாச்சூரி நோக்கி செல்வதற்கு இரவு நேரத்தில் பேருந்து இல்லாத காரணத்தால் குறித்த மாணவி தாண்டிக்குளம் பகுதியிலிருந்து கிடாச்சூரியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார். தனிமையில் மாணவி சென்ற நிலையில் முச்சக்கரவண்டியின் சாரதி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குறித்த மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி ஈச்சங்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து முச்சக்கரவண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியினை மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *