12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ… இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19.12.2019 )..!

ஜோதிடம்

19.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் மார்­கழி மாதம் 03 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி முன்­னி­ரவு 10.25 வரை. அதன் மேல் நவமி திதி. உத்­தரம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.54 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி. மரண யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளி­கை­காலம் 9.00 – 10.30 வார­சூலம் – தெற்கு (பரி­காரம் –  தைலம்) இயற்­ப­கையார் நாயனார் குரு­பூஜை. அதி­கா­லை திருப்­பள்­ளி­யெ­ழுச்சி. திருப்­பாவை ஓது தல். ஆண்டாள் உற்­சவம். பாவை நோன்பு

மேடம் : உதவி, நட்பு

இடபம் : வரவு, இலாபம்

மிதுனம் : பகை, விரோதம்

கடகம் : நன்மை, அதிர்ஷ்டம்

சிம்மம் : தடை, தாமதம்

கன்னி : உயர்வு, மேன்மை

துலாம் : இன்பம், மகிழ்ச்சி

விருச்­சிகம் : பணம், பரிசு

தனுசு : புகழ், பெருமை

மகரம் : இலாபம், ஆதாயம்

கும்பம் : புகழ், செல்­வாக்கு

மீனம் : ஆதாயம், தன­வ­ரவு

எதிர்­வரும் 25.12.2019 புதன்­கி­ழமை தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் திரு­நட்­சத்­திரம். அரு­ளிய பிர­பந்­தங்கள். திரு­மாலை, திருப்­பள்­ளி­யெ­ழுச்சி. “வேதநூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகு­வ­ரேலும் பாதியும் உறங்கிப் போகும் நின்­றதில் பதி­னை­யாண்டு. பேதை பால­க­ன­தாகும் பிணி, மூப்பு, துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்­கமா நக­ரு­ளானே! வேத சாஸ்­திரபடி மனித ஆயுள் நூறு என்­றாலும் பாதி ஐம்­பது ஆண்­டுகள் தூக்­கத்தில் போக மீதி ஐம்­பது ஆண்­டு­களில் குழந்தை பருவம் விளை­யாட்டு பரு­வத்தில் கழியும். அதன் பின் ஆசையில் கழியும் விளை­யாட்டு பருவம் வாலிப பருவம். வியா­திகள் அப­க­ரிக்கும் காலம் பல­மற்ற கிழப்­ப­ருவம் பல துன்­பங்­களால் கழிந்து விடும். ஆயுள் முழு­வதும் இப்­படி வீணா­கி­ற­ப­டியால், மானிட பிறவி வேண்டாம் ரங்­க­நாதா ஆழ்வார் மூப்பு துன்பம் என்று பாடினார். முதுமை துன்பம் என்று பாட­வில்லை. முதுமை வேறு மூப்பு வேறு. வயோ­திப காலத்தில் என் வேலை­களை நான் செய்தால் அது முதுமை. நட­மாட முடி­யாமல் பாரி­ச­வா­த­மேற்­பட்டு என்னை மற்­ற­வர்கள் கவ­னித்தால் அது மூப்பு. (தொடரும்…)

சூரியன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 2 – 5 – 6

பொருந்தா எண்கள்: 8 – 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள், பொன்நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *