10 வருடங்களுக்கு பின் காதலியை சந்தித்ததால் வந்த வினை… பிரேத பரிசோதனையில் அம்பலமான உண்மை

சினிமா

 

டெல்லியில் 10 வருடங்களுக்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த ராகுல் குமார் மிஸ்ரா (32) என்பவர் கடந்த மார்ச் 16ம் திகதியன்று, வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த தன்னுடைய மனைவியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

அங்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் போதே அவர் பரிதாபமாக உயிரிழநதார். மேலும் இதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது கடிதம் ஒன்றினை கைப்பற்றினர்.

அதில் என்னுடைய தற்கொலைக்கு வேறு யாரும் காரணமல்ல என மிஸ்ராவின் மனைவி பூஜா ராய் (26) எழுதியிருந்தார். இதனால் பூஜாவின் இறப்பில் பொலிஸாருக்கும் பெரிதளவில் சந்தேகம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் பூஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கை 27ம் திகதியன்று வெளியிடப்பட்டது. அதில் பூஜா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், எலும்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது.

இதனையடுத்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சந்தேகத்தின் பேரில் அவருடைய கணவர் மிஷ்ராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மிஸ்ராவும், பத்மா திவாரி (33) என்பவரும் சிறுவயதிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். 12ம் வகுப்பு முடிந்ததும், மிஸ்ரா பொறியியல் படிப்பிற்காக வெளியில் சென்றுவிட்டார். இதனால் இருவரும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளனர்.

பின்னர் 2015ம் ஆண்டு பள்ளி நண்பர்கள் மட்டும் இருந்த வாட்ஸ் ஆப் குழுவின் மூலம் மீண்டும் மிஸ்ராவின் தொடர்பு பத்மாவிற்கு கிடைத்துள்ளது.

உடனடியாக இருவரும் காதல் வலையில் விழுந்துள்ளனர். ஆனால் இதற்கு மிஸ்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 23, 2017 அன்று பூஜாவை திருமணம் செய்து வைத்தனர்.

பத்மா தன்னுடைய தோழி என மிஸ்ரா, பூஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலித்து வருவதை கண்டறிந்த பூஜா கணவருடன் சண்டையிட ஆரம்பித்துள்ளார். இதனால் இருவரும் பூஜாவை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

யூடியூபில் கொலை செய்வது பற்றி ஆராய்ந்த மிஸ்ரா, தன்னுடைய திட்டம் குறித்து பத்மாவிடம் கூறியுள்ளார்.

மார்ச் 16ம் திகதியன்று வழக்கம் போல மிஸ்ரா வேலைக்கு சென்றுவிட்டார். அந்த சமயம் வீட்டிற்கு வந்த பத்மா சாப்பிடும் பழச்சாறில் எலி மருந்தை கலந்து பூஜாவிற்கு கொடுத்துள்ளார்.

விஷம் கலந்திருப்பதை தெரிந்துகொண்ட பூஜா அங்கிருந்து தப்பியோட முயன்ற போது , அவருடைய தலையை பிடித்த பத்மா சுவற்றில் அடித்து தரையில் செய்த்துள்ளார்.

பின்னர் தன்னுடைய காதலன் மிஸ்ராவிற்கு போன் செய்து, வேலையை முடித்துவிட்டேன் எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு விரைந்த மிஸ்ரா, ஒன்றுமே தெரியவர் போல மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *