ஸ்ரீலங்கா மக்களுக்கு இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் விடுத்த எச்சரிக்கை..!!

உடற்பயிற்சி

ஸ்ரீலங்கா தொலைபேசி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், லிங்குகளுடன் (Links) வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்று காரணமாக தற்போது இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மருத்துவத்துறையினர் உள்ளிட்ட பலர் மக்களை காப்பதற்காக அர்ப்பணிப்பாக செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸில் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கு, இலவச முகக்கவசங்கள் வழங்கப்படுவதாக மக்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் குறுஞ்செய்தியில் லிங்க் (Links) ஒன்றும் இணைத்து அனுப்பப்படுகின்ற நிலையில் அவ்வாறான குறுஞ்செய்திகள் வருமானால் அதில் குறிப்பிடப்படும் லிங்கை (Links) கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் எச்சரித்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்யும் போது அந்த நபரின் தெலைபேசி முற்று முழுதாக ஹெக் செய்யப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *