ஸ்ரீதேவி உடல் இன்று இந்தியா வர வாய்ப்பில்லை.. ஏன் இந்த திடீர் தாமதம் தெரியுமா? l

சினிமா

துபாய்: நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு நட்சத்திர ஹோட்டல் குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்து 24 மணி நேரம் கடந்துவிட்ட நிலையிலும், அவரது உடலை இந்தியா கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஸ்ரீதேவியின் உடல்கூறு சோதனை மற்றும், இறப்பு சான்றிதழ்கள் இன்று மாலையே வழங்கப்பட்டுவிட்ட போதிலும், ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு செல்வதில் தாமதம் ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி என்பவர் துபாய் அரசை பொறுத்தளவில் ஒரு வெளிநாட்டு பிரஜையாகும்.

 

மர்ம சாவு ஸ்ரீதேவி மரணம் திடீரென நிகழ்ந்துள்ளது. அதுவும் உடல் நோயால் பாதிக்கப்பட்டு அவர் இறக்கவில்லை. தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. அவரது உடலில் ஆல்கஹால் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. எனவே இதை சாதாரண மரணமாக பார்க்க முடியாது. சந்தேகத்திற்கிடமான சாவு என்ற பிரிவில்தான் துபாயில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஸ்ரீதேவி மரண வழக்கு இப்போது துபாய் public prosecution துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உரிய விசாரணை நடத்தி ஒப்புதல் வழங்கிய பிறகே ஸ்ரீதேவி உடலை இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

 

இதனால்தான் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இன்று அனுமதி கிடைக்காது இந்திய தூதரக மட்டத்தில், கூடிய விரைவில் ஸ்ரீதேவி உடலை இந்தியா எடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடைமுறைகளால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் முழு அளவிலான உடல்கூறு சோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. மேலோட்டமான முதல்கட்ட அறிக்கைதான் வெளியாகியுள்ளது. எனவே, இன்றைக்குள் ஸ்ரீதேவி உடலை இந்தியா எடுத்துச் செல்ல துபாய் அரசு அனுமதி வழங்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. நாளைதான் நாளை, அதாவது, செவ்வாய்க்கிழமைதான், ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு செல்ல துபாய் public prosecution துறை அனுமதி கொடுக்கும் என்று தெரிகிறது. இதனால் நாளையாவது ஸ்ரீதேவிக்கு மும்பையில் இறுதி சடங்குகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *