வைரலாகும் எமிஜாக்சன் குழந்தையுடன் இருக்கும் வீடியோ !! எவ்ளோ அழகா இருக்குன்னு பாருங்க !!

சினிமா

‘மதராசபட்டினம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமிஜாக்சன். அதனை அடுத்து அவர் நடிப்பில் வெளியான ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்க மகன்’, ‘தெறி’, ‘2.0’ எனப் பல படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருந்த போதே எமிக்கு பாலிவுட் பக்கம் வாய்ப்பு கிடைத்தது.

அதனை அடுத்து அவர் பாலிவுட் பக்கம் தாவினார். அங்கே நடித்து கொண்டிருந்த போது அவருக்கு ஜார்ஜூடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஒளிவுமறைவில்லாமல் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். 2015ஆண்டு ‘காதலர் தினம்’ முதல் இணைந்து வாழ ஆரம்பித்தனர். அதன் பிறகு ஒன்றாக இணைந்து இருவரும் பல நாடுகளுக்கு பயணம் செய்தனர்.

இந்நிலையில்தான் திருமணத்திற்கு முன்பே எமிஜாக்சன் தாயானார். ஆகவே இருவருக்கும் கடந்த ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு முன்பே எமி தாயான விஷயம் சினிமா வட்டாரங்களில் பேசு பொருளானது. இந்நிலையில் கடந்த மாதம் எமி ஜாக்சனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இந்தத் தம்பதி ஆண்ட்ரியாஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.

குழந்தை பிறந்து ஒருமாதம் நிறைவடைந்த நிலையில், எமி, தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், “பிறந்த நாள் வாழ்த்துகள் என் அழகு மகனே. இன்றுடன் உனக்கு ஒருமாசம் முடிவடைந்துவிட்டது. நீ இல்லாத வாழ்க்கையை நான் நினைத்து பார்க்க விரும்பவில்லை.

நீதான் என்னை முழுமையாக்கி இருக்கிறாய். அதற்காக நான் ஒவ்வொரு நொடியும் உனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான் உன் மீது வைத்திருக்கும் அன்பு எல்லை இல்லாதது” என்று குறிப்பிட்டுள்ளார் எமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *