வேலைக்கு சேர்ந்த 5வது நாளில் முதலாளியைக் கொன்ற வடஇந்திய இளைஞர்கள்! – அம்பத்தூர் அதிர்ச்சி

சினிமா

 

 

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். அ.தி.மு.க.பிரமுகர். இவரின் மகன் பிரபாகரன் (27). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அத்திபட்டு, நடேசன்நகரில் சிறிய அறையில் மோல்டிங் செய்யும் கம்பெனியை நடத்தி வந்தார். இந்தநிலையில் பிரபாகரனை தொடர்பு கொள்ள அவரின் செல்போனுக்கு ஆனந்தன் பல தடவை கால் செய்துள்ளார். ஆனால் பிரபாகரன் போன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால், கம்பெனிக்கு ஆனந்தன் வந்தார்.

MURDER

MURDER

அப்போது ரத்த வெள்ளத்தில் பிரபாகரன் இறந்துகிடந்துள்ளார். அதைப்பார்த்து ஆனந்தன் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பிரபாகரனின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது 2 வடஇந்திய இளைஞர்கள் அங்கிருந்து வேகமாக ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், “பிரபாகரனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அவரின் மனைவி பெயர் நந்தினி. இவர்களுக்கு 4 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. பிரபாகரனின் அப்பா ஆனந்தன்தான் இந்த தொழிற்சாலையை 40 ஆண்டுகளாக நடத்திவந்தார். தற்போது பிரபாகரன், இந்தக் கம்பெனியை நடத்திவந்துள்ளார். மோல்டிங் பணிக்காக வடஇந்தியாவைச் சேர்ந்த சிலரை பிரபாகரன் பணியமர்த்தியுள்ளார். அவர்களின் ஊர், பெயர் விவரங்கள் தெரியவில்லை.

 பிரபாகரன்

பிரபாகரன்

இந்தத் தொழிலாளிகள் 5 நாள்களுக்கு முன்தான் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். இந்தச் சமயத்தில் பிரபாகரனுக்கும் வடஇந்திய இளைஞர்களுக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் பிரபாகரனின் தலையில் இரும்பு ராடால் அடித்துள்ளனர். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த பிரபாகரனின் தலை, முகத்தில் அடித்துள்ளனர். இதனால் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே பிரபாகரன் இறந்துள்ளர். அவரின் தலை, முகத்தில் மூன்றே இடங்களில் மட்டுமே காயங்கள் உள்ளன. இதனால் இரும்பு ராடால் மூன்று தடவை பிரபாகரனைத் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அவர்கள் குறித்த விவரங்கள் பிரபாகரனின் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. கொலை நடந்த இடத்தில் மருந்து சீட்டு ஒன்று கிடைத்துள்ளது. அதை வைத்து இந்தக் கொலை வழக்கை விசாரித்துவருகிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *