“வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்தது உண்மை” : குற்றங்களை ஒப்புக்கொண்ட ஷமி

சினிமா

 

 

 

வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்தது உண்மைதான் என்று பிசிசிஐ விசாரணை குழுவிடம் முகமது ஷமி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். அதேபோல் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக ஹசின் ஜகான் கூறினார். அதன்பின் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார். ஷமி சூதாட்டம் செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது என்றும் கூறினார். ஷமி மீது போலீசில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

Mohammad shami Pleaded girls affair latest gossip

ஷமியை பிசிசிஐ அமைப்பை சேர்ந்த நீரஜ் குமார் என்பவர் விசாரித்து வந்தார். முகமது ஷமி மீதான மேட்ச் பிக்சிங் விசாரணை குறித்த அறிக்கை பிசிசிஐ அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஷமி மேட்ச் பிக்சிங் செய்து இருக்க மாட்டார் என்று இதில் சில வரிகள் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷமி மீண்டும் கிரிக்கெட் விளையாட வசதியாக பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்ததை பிசிசிஐ விசாரணையில் ஷமி ஒப்புக்கொண்டு இருக்கிறார். முக்கியமாக அலீஷ்பா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்தேன் என்றும் அவர் பிசிசிஐ விசாரணை குழுவிடம் தெரிவித்துள்ளார். அலீஷ்பா பாகிஸ்தானை சேர்ந்த பெண் என்று ஹசின் ஜஹான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.

 

மேலும் அலீஷ்பாவை பார்க்கத்தான் துபாய் சென்றேன் என்றும் ஷமி குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடரை முடித்துவிட்டு துபாய் சென்றது அலீஷ்பாவை பார்க்கத்தான் என்று ஷமி குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவரிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பணம் வாங்கியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதில் பிசிசிஐ அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது. இது அவரது குடும்ப பிரச்சனை என்பதால் குடும்பநல நீதிமன்றத்தில் இந்த பிரச்சனையை தீர்த்துக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இவர் கிரிக்கெட் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *