வெளிநாட்டு பெண்ணை அசால்ட்டாக ஆட்டையப் போட்ட நம்ம ஊரு பையன் எப்படி ஒர்கவுட் ஆச்சு தெரியுமா கேட்டால் அசந்து போவீங்க

சினிமா

ஜப்பானைச் சேர்ந்த பெண் தமிழக இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த வசந்தன். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் ஆராய்ச்சி படிப்புக்காக சென்றுள்ளார். அதன் பின் படிப்பை முடித்த இவர் அங்கே வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு பேஸ்புக் வழியாக ஜப்பானை சேர்ந்த வழக்கறிஞர் மேகுமி என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் பேஸ்புக் பக்கத்தில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் காதல் என்பதை இருவரும் உணர்ந்ததால், திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இது குறித்து இருவீட்டாரிடம் சம்பதம் பெற்ற இந்த காதல் ஜோடிக்கு, சில மாதங்களுக்கு முன் கும்பகோணத்தில் வைத்து தமிழ் பாராம்பரிய கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.

மணப்பெண்ணின் பெற்றோர் வர இயலாததால், அவரது தாய் மாமன் முன்நின்று, பெற்றோருக்கான சடங்குகளை செய்தார். இத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகளின் தங்கை,நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ் கலாச்சாரப்படி வேட்டி, புடவை அணிந்து திருமணத்துக்கு வந்தவர்களை வாழ்த்தி வரவேற்றது மண்டபத்தில் இருந்த பலரையும் நெகிழ செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *