வெப் சீரியலாக உருவாகும் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’

சினிமா

 

 

‘சிகப்பு ரோஜாக்கள்’ இரண்டாம் பாகம் தற்போது, வெப் சீரியலாக உருவாகவுள்ளது.

பாரதிராஜாவின் இயக்கத்தில், கமல் – ஸ்ரீதேவி நடிப்பில் 1978 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’.கே.பாக்யராஜ் கதை, வசனத்தில் உருவான இந்த க்ரைம் த்ரில்லர் படம் அப்போது வெள்ளி விழாக் கொண்டாடியது.

40 வருடங்களுக்குப் பிறகு ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்தப் படத்தை இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் கே.பாரதி இயக்க இருக்கிறார்.

‘தாஜ் மஹால்’ படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான நடிகர் மனோஜ் கே.பாரதி, ‘கடல் பூக்கள்’, ‘சமுத்திரம்’, ‘அன்னக்கொடியும் கொடி வீரனும்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ள மனோஜ் கே.பாரதி, படம் இயக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்காக,சில வருடங்களுக்கு முன்பு, ‘சிகப்பு ரோஜாக்கள்’இரண்டாம் பாகத்தின் கதையை உருவாக்கி,அந்தப் படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமாகப் போவதாக அறிவித்தார். ஆனால், அந்த முயற்சி கை கொடுக்கவில்லை!

தற்போது அவர், தந்தை பாரதிராஜா துவங்கிய சினிமா கல்லூரியில், நடிப்பு சம்பந்தமான பாடம் எடுத்து வருகிறார்.

இந்நிலையில்,‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்துக்காக எழுதப்பட்ட அந்த ஸ்கிரிப்ட்டை வெப் சீரியலாக இயக்க முடிவு செய்துள்ளார் மனோஜ் கே.பாரதி. இதில் டைரக்டர் வேடத்தில் பாரதிராஜா நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *