வீட்டில் திருமண பந்தல் அகற்றப்பட்டு அங்கு வைக்கப்பட்ட புதுமாப்பிள்ளையின் சடலம்! மகிழ்ச்சி போய் அழுகை ஓலம்

சினிமா

 

 

தேனிலவுக்கு சென்ற இடத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளையின் உடல் சென்னைக்கு விமானத்தில் வந்தடைந்தது.

சென்னை அமைந்தகரை சேர்ந்தவர்கள் அரவிந்த்-ப்ரீத்தி தம்பதி. இவர்களுக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையடுத்து தேனிலவு செல்ல திட்டமிட்டு ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள குலுமணாலிக்கு சென்றிருந்தனர்.

அங்கு இருவரும் வானில் பாராகிளைடிங் சாகசம் செல்ல திட்டமிட்டனர். அதன்படி, முதலில் ப்ரீத்தி பாரா கிளைடரில் ஏறி, வானில் பறந்து இறங்கினார்.

அதைத் தொடர்ந்து அரவிந்த் வானில் பறக்க பாரா கிளைடரில் ஏறி வானில் பறந்தார்.

இந்த முறையில் பாரா கிளைடிங்கில் பாரா கிளைடர் பைலெட் ஒருவருடன் நாம் ஏறிப் பறக்கலாம். இதற்குக் கட்டணமாக ரூ. ஆயிரத்து 500லிருந்து ரூ. 6 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில், பாரா கிளைடரிலிருந்த அரவிந்த் கீழே விழுந்தார். இந்த சம்பவம் ப்ரீத்தி கண்முன்னே, அரங்கேறியது. கீழே விழுந்த அரவிந்த் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார், அவரது உடலை பார்த்து மனைவி ப்ரீத்தி கதறி அழுதார்.

இதில் விமானி ஹரி ராமுக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமணத்திற்காக, அரவிந்த் வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த பந்தல், நேற்று தான் அகற்றப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் அவரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து விமானம் மூலம் நேற்று நள்ளிரவு சென்னை கொண்டு வரப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டது.

உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமண வீடாக காட்சியளித்த அரவிந்த் வீடு தற்போது அழுகை ஓலமாக காட்சிளிப்பது அந்த பகுதி மக்களின் மனதை உலுக்கியுள்ளது.

இது குறித்து பேசிய அரவிந்த் பெற்றோர், எவ்வளவு செல்லமாக நாங்கள் அரவிந்தை வளர்த்தோம், அவ்வளவு ஆசையுடன் ஆரம்பரமாக திருமணம் செய்து வைத்தோம்.

ஆனால் அவன் திருமண வாழ்க்கை 8 நாளில் முடிந்துவிட்டது. தேனிலவுக்கு மகிழ்ச்சியாக சென்ற அரவிந்த் தற்போது பிணமாக வீட்டுக்கு வந்துள்ளான் என கண்ணீருடன் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *