வீட்டில் இருக்கும் முதியவர்கள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட எச்சரிக்கை..! வயதானவர்கள் தினமும் இதனை செய்யுங்கள்…!!

உடல் ஆரோக்கியம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறது. வாழ்வா சாவா என தெரியாமல் மக்களின் உயிரை காப்பாற்ற வைத்தியர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் அனைவரையும் வீட்டில் பாதுகாப்பாக அரசு இருக்க கூறியதுடன் ஊரடங்கு சட்டம் போடப் பட்டு நாடுகள் லாக் டவுன் செய்யப் படுகின்றது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு முதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இதில் கொரொனா வைரஸால் பாதிக்கப் படுபவர்களில் அதிகம் மரணமடைவது முதியவர்களாகவே இருக்கின்றனர். இதற்கான காரணம் வயதானவர்களிடம் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே.. இருப்பினும் சிலரின் மன தைரியம் என்பது அவர்களை காப்பாற்றி விடுகிறது.

அண்மையில், 101 வயது , 90 வயது என முதியவர்கள் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்தனர். இதனால் முதியவர்கள் தங்கள் நன தைரியத்தை கைவிடக் கூடாது. அத்துடன் கொரோனாவிற்கு பயந்து நீரழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், போன்ற நோய்களுக்கு எடுத்து வரும் மருந்தை நிறுத்த கூடாது என அறிவித்துள்ளது. அத்துடன் முதியவர்களின் மன உளைச்சலை குறைத்து மனதளவில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

இதற்கு காலையில் எழுந்து வீட்டை சுற்றி எனும் 10 நிமிட நடை பயிற்சி மேட்கொள்ள வேண்டும். வீட்டில் சோர்ந்து போய் இருப்பதால் மனதளவிலும் உடல் அளவிலும் ஆரோக்கியம் குறைந்து விடும். இப்படியானவர்களிடம் தான் நோய் தொற்றுக்கள் அதிகமாகும். அதனால் வீட்டில் உள்ளவர்களும் முதியோர் விடயத்தில் கவனம் செலுத்துங்கள் என தெரிவித்துள்ளது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *