விமானத்தில் ஏற பத்து வயது சிறுவனுக்கு வி திக்கப்பட்ட தடை! காரணம் என்ன தெரியுமா? வெளியான புகைப்படம்

உடற்பயிற்சி

தென் ஆப்பிரிக்கா செல்லும் விமானத்தில் ஏற முயன்ற பத்து வயது சிறுவன் அணிந்திருந்த சட்டையில் பாம்பு புகைப்படம் அச்சடிக்கப்பட்டிருந்ததால் அவன் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

நியூசிலாந்தை சேர்ந்தவர் லூகாஸ். இவர் மகன் ஸ்டீவ் (10). ஸ்டீவ் தென் ஆப்பிரிக்காவில் உள்ள தனது பாட்டியை காண தாயுடன் விமான நிலையத்துக்கு வந்தான்.

அப்போது அவனை விமானத்தில் ஏற அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

 

இதற்கு காரணம், ஸ்டீவ் அணிந்திருந்த டீ சர்ட் தான், அதில் பச்சை நிறத்திலான பாம்பு இருக்கும் புகைப்படம் பெரியளவில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

இது போன்ற புகைப்படம் கொண்ட சட்டையை அணிந்து கொண்டு விமானத்தில் ஏற முடியாது, சக பயணிகளுக்கு இதனால் தேவையில்லாத பயம் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர்.

View image on TwitterView image on Twitter

இது சிறுவனின் தாய்க்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது, இந்த பிரச்சனையால் விமானத்தை தவற விட வேண்டாம் என நினைத்த லூகாஸ் தனது மகன் ஸ்டீவிடன் டீ சர்ட்டை திருப்பி உள்பக்கமாக போட சொன்னார்.

டி சர்ட்டை மாற்றி அணிந்த பிறகு விமானத்தில் பயணிக்க ஸ்டீவ் அனுமதிக்கப்பட்டான், இருவரும் ஊருக்கு வந்தவுடன் இது தொடர்பாக விமான நிறுவனத்துக்கு லூகாஸ் இமெயில் அனுப்பினார்.

அதற்கு பதிலளித்த நிறுவனம், எங்கள் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு வந்ததற்கு நன்றி.

ஆடை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்னும் விரிவான காரணங்களை கேட்டுள்ளோம், விரைவில் அது தொடர்பில் உங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *