வாரிசாக ஆண் குழந்தை பிறக்கவில்லையே.. 3 பெண்களின் தாய் எடுத்த விபரீத முடிவு!

சினிமா

 

ஆந்திர மாநிலத்தில் 3 பெண் குழந்தைகளுக்கு தாயான ஒருவர், ஆண் குழந்தை தமக்கு பிறக்கவில்லையே என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தின் மிதுதுரு மண்டலத்திலுள்ள சுங்கேசுலா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டில் சுங்கேசுலாவைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர், சரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஆனால் தங்கள் குடும்ப வாரிசாக ஒரு மகன் இல்லையே என நீண்ட காலமாக வருத்தத்தில் இருந்துள்ளார் சரம்மா. தவிர மாதவிடாய் சுழற்சியின் போதும் மிக கடுமையான வயிற்று வலியால் தொடர்ந்து பல மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த 2 காரணங்களுக்காகவும், வீட்டில் யாரும் இல்லாதபோது சரம்மா மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
Tweet
Email
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *