வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும் சில இயற்கை வழிகள்

மருத்துவம்

உடல் ஆரோக்கியத்தில் வாய் ஆரோக்கியமும் முக்கிய பங்கை வகிக்கிறது. வாயில் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது இன்றியமையாதது ஆகும். ஒருவரது உடலினுள் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவை வாயின் வழியே எளிதில் நுழையும். இப்படி வாயின் வழியே நுழையும் கிருமிகள், உடலின் இதர உறுப்புக்களை பாதித்து, பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

சொல்லப்போனால், வாயில் ஏற்படும் நோய்கள் தீவிரமானால், நோய்களை உண்டாக்கிய கிருமிகள் நேரடியாக நுரையீரல், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளை அடைந்து, நினைத்துப் பார்க்க முடியாத அளவிலான பிரச்சனைகள் உண்டாக்கிவிடும். அதுவும் இதய நோய், பாக்டீரியல் நிமோனியா, சர்ச்சரை நோய் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். எனவே தான் வாயின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்று கூறுகின்றனர்.

Natural Ways to Detox Your Mouthஉங்களுக்கு வாயில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து அழிக்கும் எளிய இயற்கை வழிகளை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், கீழே வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வழிகளால் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் நீங்குவதோடு, ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் வெண்மையாக இருக்கும்.

நச்சுக்கள் இல்லாத டூத் பேஸ்ட்

நச்சுக்கள் இல்லாத டூத் பேஸ்ட்
வாயின் ஆரோக்கியத்தில் டூத் பேஸ்ட்டுகள் முக்கிய பங்கை வகிக்கிறது. எப்படியெனில் டூத் பேஸ்ட்டுகள் ஆன்டி-பாக்டீரியல் போன்று செயல்படும். ஆனால் அது எந்த வகையான டூத் பேஸ்ட்டை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சரியான டூத் பேஸ்ட்டை எப்படி தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் கேட்கலாம். ப்ளூரைடு, சோடியம் லாரில்/லாரீத் சல்பேட், ட்ரைக்ளோசன், சோடியம் ஹைட்ராக்ஸைடு போன்ற கெமிக்கல்கள் நிறைந்த டூத் பேஸ்ட்டைப் பயன்படுத்தக்கூடாது. இந்த கெமிக்கல்கள் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும் மற்றும் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைக் குறைக்கும். ஆகவே வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும், ஆன்டி-பாக்டீரியல் ஏஜென்ட்டுகள் மற்றும் வேப்பம், அதிமதுரம், யூகலிப்டஸ், கிராம்பு, புதினா போன்றவை நிறைந்த நேச்சுரல் டூத் பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.

நாக்கை சுத்தப்படுத்தும் பொருள்

நாக்கை சுத்தப்படுத்தும் பொருள்
வாயிலேயே நாக்கில் தான் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். எனவே அந்த நாக்கை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவரது வாயில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதற்கு நாக்கில் இருக்கும் அதிகப்படியான பாக்டீரியாக்களும் ஓர் காரணம். எனவே தினமும் பற்களைத் துலக்கும் போது, மறக்காமல் நாக்கை சுத்தப்படுத்தும் பொருள் கொண்டு, நாக்கை சுத்தம் செய்யுங்கள். இப்படி சுத்தம் செய்வதால், வாய் சுத்தமாக இருப்பதோடு, சுவாசமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதோடு, உடலின் மெட்டபாலிசமும் தூண்டப்படும்.

அயோனிக் டூத் பிரஷ்

அயோனிக் டூத் பிரஷ்
வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை இயந்திர ரீதியாக குறைக்கும் ஓர் டூத் பிரஷ் தான் அயோனிக் டூத் பிரஷ். ஆனால் புதிய ஆய்வு ஒன்றில் அயோனிக் டூத் பிரஷ் மேலும் பல நன்மைகளைக் கொடுப்பதாக தெரிய வந்துள்ளது. அதில் இந்த வகை டூத் பிரஷைப் பயன்படுத்தினால், பற்களில் படிந்து மஞ்சள் நிற பற்காறைகள் நீங்குவதோடு, வாயின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, பற்கள் பளிச்சென்று வெண்மையாக இருக்குமாம். எனவே உங்கள் பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள நினைத்தால், அயோனிக் டூத் பிரஷை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங்
வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கவும், பற்களை வெள்ளையாக வைத்து கொள்ளவும், வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் உதவும் மற்றொரு சிறப்பான வழி தான் ஆயில் புல்லிங். தினமும் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு 10 நிமிடம் கொப்பளித்து, பின் வாயைக் கழுவி, வழக்கம் போல் பற்களைத் துலக்க வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

புரோபயோடிக்ஸ்

புரோபயோடிக்ஸ்
நல்ல பாக்டீரியாக்கள் நம் குடலில் மட்டும் இருப்பதில்லை, வாய்ப் பகுதியிலும் தான். குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளாக தயிர் போன்றவற்றை சாப்பிடுவோம். அப்படியெனில் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அதிகரிக்க என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கும் தயிரை சாப்பிட்டாலே போதும். தினமும் சற்று புளிக்க வைத்த தயிரை உட்கொண்டு வந்தால், அது வாயில் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து, கெட்ட பாக்டீரியாக்களின் அளவை எதிர்த்துப் போராடி, வாயில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும்.

வேப்பிலை ஆயில்

வேப்பிலை ஆயில்
வேப்பிலை எண்ணெய் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க பழங்காலம் முதலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேப்பிலை எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, பற்களில் உள்ள பிளேக்குகளின் அளவைக் குறைத்து, ஈறுகளில் இருந்து கசியும் இரத்தக்கசிவைப் போக்கும். அதற்கு வேப்பிலை எண்ணெயை ஈறுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வாயைக் எழுவுங்கள்.

க்ரீன் டீ

க்ரீன் டீ
க்ரீன் டீயைக் குடித்தால், அது கதிரியக்க தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிப்பதோடு, உடல் எடையைக் குறைக்கும், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அத்துடன் வாயின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆய்வு ஒன்றில், க்ரீன் டீயை தினமும் குடித்து வருபவர்களின் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பல்லைச் சுற்றி ஏற்படும் நோயின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்கள் வாய் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்க நினைத்தால், க்ரீன் டீயை தினமும் குடியுங்கள்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில்
டீ-ட்ரீ ஆயிலில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளன. இந்த எண்ணெயை டூத் பிரஷ் அல்லது விரலில் ஒரு துளி ஊற்றி, பற்களைத் துலக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு துளி எண்ணெயால் பற்களைத் துலக்கினால், வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் குறையும். ஆராய்ச்சியில் டீ-ட்ரீ ஆயில் பல் ஈறு அழற்சி மற்றும் ஈறுகளில் உள்ள இரத்தக்கசிவைக் குறைக்கும் என தெரிய வந்துள்ளது. ஆகவே வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், இந்த எண்ணெயை அன்றாடம் தவறாமல் பயன்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *