வறுத்த மட்டன் கறி , mutton cury tamil

ஆரோக்கிய சமையல்

எம்வாழ்நாளில் கொங்கு சமையல் உடன் ஊறிபோன எமக்கு வித்தியாசமான சுவையுடன் எம்மை மனங்கவர்ந்த மட்டன் ஃப்ரை

தேவையான பொருட்கள்

மட்டன் 1 கிலோ ( நெஞ்சு கறி 1/2 கிலோ + முன்னங்கால் கறி 1/2 கிலோ )

மட்டனை ஊறவைக்க

வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
வேதாரண்யம் கடல் உப்பு தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி ( இஞ்சி 30% பூண்டு 70% )
பெரிய வெங்காயம் 6 ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 3 ( பொடியாக நறுக்கியது )

வறுத்து அறுக்க
தேங்காய் துருவல் 1 1/2 கப்
சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி
கொத்தமல்லி விதை 2 மேஜைக்கரண்டி
பட்டை 1 இன்ச்
கிராம்பு 5
ஏலக்காய் 2
அண்ணாச்சி மொக்கு 3
சோம்பு 1 மேஜைக்கரண்டி
குருமிளகு 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 4
கறிவேப்பிலை ஒரு கொத்து
கசாகசா 1 மேஜைக்கரண்டி
பிரிஞ்சி இலை 1
கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி

தாளிக்க
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
நாட்டு மாட்டு பசு வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
பழுத்த பச்சை மிளகாய் 3 ( அம்மியில் விழுதாக அரைத்து கொள்ளவும்)
இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
தேங்காய் மெல்லியதாக நறுக்கியது 12
சின்ன வெங்காயம் 4 ( பொடியாக நறுக்கியது )

செய்முறை

1. மட்டனை நன்றாக சுத்தமாக கழுவி வைத்து கொள்ள வேண்டும்.

2. அதில் வரமிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள் , தேவையான அளவு உப்பு மற்றும் நன்றாக ஒரு பழுத்த தக்காளியை அரைத்த விழுது சேர்த்து நன்கு பிசைந்து இந்த கலவையை குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

3. ஒரு இரும்பு வடச்சட்டியில் மரசெக்கு தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி இது விட்டால் கொஞ்சம் மணமாக இருக்கும். அதற்கு பிறகு வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

4. கசாகசா வை வறுக்கும் சமயத்தில் கொஞ்சம் கவனம் தேவை. பொன்னிறமாக மாறியதும் எடுத்து தனியாக வைத்து ஆறவைக்க வேண்டும்.

5. இப்போது இந்த கலவையை நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நல்ல மையாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

6. இப்போது பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து கோங்க அதை நல்ல பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

7. அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அரைத்து வைத்துள்ள பழுத்த பச்சை மிளகாய் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.

8. இச்சமயத்தில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

9. அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

10. இப்போது குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ஊற வைத்த மட்டனை சேர்த்து அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதை கறி தன்மைக்கு ஏற்றவாறு 4ல் இருந்து 6 விசில் வரை விட்டு கொள்ள வேண்டும்.

11. அது நன்றாக வெந்து விட்தா என்று உறுதி படுத்திய பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து நன்றாக கிளறவும்.

12. அடுப்பை சிறுதீயிலையே வைத்து நன்றாக இடை இடையே கிளறவும் மசாலாவுடன் நன்றாக ஒன்றி கிளறவும்.

13. இப்போது இதில் சிறிது சிறிதாக பசு வெண்ணையை சேர்த்து நன்றாக சிவக்க சிவக்க கிளறி கொண்டே வறுக்கவும்.

14. இப்போது மற்றுமொரு சிறிய வடச்சட்டியில் 1 தேக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க அது நன்றாக காய்ந்ததும் அதில் தேங்காய் வில்லைகள் மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக முறுகலாக பொன்னிறமாக சிவக்க வதக்கி இறக்கும் சமயத்தில் சிறிது கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

15. பிரஷர் குக்கரில் உள்ள மட்டனை மசாலாவுடன் நன்றாக பொன்னிறமாக ஆனதும் மட்டன் மசாலாவுடன் நன்றாக ஒன்றி சிவந்து கிரேவி முழுவதுமாக வற்றி இருக்கும் நிலையில் மற்றுமொரு வடச்சட்டியில் தாளித்து வைத்துள்ள தேங்காய் வில்லைகளை சேர்த்து கிளறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *