வயிறு வலிப்பதாக அழுத 7 வயது சிறுமி! X-rayவை பார்த்து அ திர்ச்சியான மருத்துவர்கள்… வெளியான புகைப்படங்கள்

உடல் ஆரோக்கியம்

அவுஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட காந்த உருண்டைகளை ஓன்லைனில் வாங்கிய சிறுமி அதை விழுங்கிய நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ரெபிகா. இவர் மகள் ஒலிவியா (7). இவர் வீட்டில் காந்த உருண்டைகளை வைத்து விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பக்கத்து அறையில் இருக்கும் அம்மாவை கத்தியபடியே ஒலிவியா அழைத்தார்.

இதையடுத்து காந்த உருண்டைகளை தான் விழுங்கிவிட்டதாகவும் தனக்கு வயிறு வலிப்பதாகவும் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் ரெபிகா உடனடியாக மகளை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

அங்கு சிறுமி ஒலிவியாவுக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து அதன் அறிக்கையை பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.

காரணம் சிறிது சிறிதான காந்த உருண்டைகளை அவர் அதிகளவில் விழுங்கியதும் அது செரிமானம் ஆகும் இடத்தில் சிக்கி கொண்டதும் அதில் தெரியவந்தது.

அதே நேரத்தில் வேறு ஒரு சிறுவனும் காந்த உருண்டைகளை விழுங்கியதாக அங்கு வந்திருந்தான்.

இருவருக்கும் உடனடியாக சிகிச்சையளித்த மருத்துவர்கள் காந்த உருண்டைகளை போராடி வெளியில் எடுத்தனர்.

குறித்த காந்த உருண்டைகள் அவுஸ்திரேலியாவில் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் ஓன்லைனில் அது விற்பனை செய்யப்படுவதால் பலரும் அதை வாங்குவது தெரியவந்தது.

இது மிகவும் ஆபத்தான பொருள் எனவும் குழந்தைகளிடம் அதை கொடுக்க கூடாது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து ஒலிவியாவின் தாய் ரெபிகா கூறுகையில், எனக்கு காந்த உருண்டைகள் அவுஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டது தெரியாது.

அதை உணராமல் என் மகளுக்கு ஓன்லைனில் வாங்கி கொடுத்துவிட்டேன்.

இது தொடர்பில் இனி யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *