வயதான தோற்றத்தை தடுக்க வெங்காயத்தை வைத்து தினமும் இப்படி செய்யுங்க.

அழகுக் குறிப்புகள்

 

நாம் தினமும் உண்ணும் உணவில் வெங்காயம் முக்கிய இடம் பெற்றுள்ளது என்பது அணைவரும் அறிந்ததே. இது உடலிற்கு தேவையான விட்டமின் கனியுப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. வெங்காயம் பயன்படுத்துவதனால் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்வதுடன், சமிபாட்டை சீராக்குவதுடன், சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்கின்றது.

வெங்காயத்தை வெளியே பூசுவதனால் இதில் உள்ள விட்டமின் ஏ கொலஜன் உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் சருமம் மிருதுவாகின்றது. மேலும் இதில் உள்ள விட்டமின் ஈ சூரியக் கதிர்களின் பாதிப்பு, தோல் சுருக்கங்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

வெங்காயத்தில் போதியளவு விட்டமின் ஏ, சி, ஈ இருப்பதனால் எல்லா வகையான சருமப் பிரச்சினைகளையும் இலகுவாக குணப்படுத்துகிறது.

வெங்காயத்தால் சருமத்திற்கு கிடைக்கும் இயற்கை தீர்வுகள் என்ன?

1. சருமம் வயதடைவதை தடுத்தல்:
இதில் உள்ள விட்டமின் சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் சுருக்கங்களை நீக்கி வயதடைவதை தடுக்கும்.

தேவையானவை:
• 1 சிறிய வெங்காயம்.
• பஞ்சு.
• நீர்.

பயன்படுத்தும் முறை:
வெங்காயத்தை வெட்டி அதில் உள்ள சாற்றை எடுத்து பஞ்சினால் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். சிறந்த தீர்விற்கு வாரத்திற்கு 2 அல்லது 3 தடவைகள் இதனை செய்வது சிறந்தது.

2. பொலிவான சருமத்திற்கு:
சருமம் களை இழந்து சோர்வாக இருக்கும் போது வெங்காயத்தை பயன்படுத்துவதனால் அதில் உள்ள விட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியும் புதுப் பொலிவையும் பெற்றுத் தரும்.
தேவையான பொருட்கள்:
• ஒரு கப் நீர்.
• ஒரு கப் வெங்காயம்.

பயன்படுத்தும் முறை:
வெங்காயத்தை வெட்டி அரைத்து பசையாக எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் அல்லது கழுத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.


3. பிரகாசமான சருமத்திற்கு:
சருமத்தில் உள்ள நிறத்திட்டுக்களையும், கரும்புள்ளிகளையும் நீக்கி பிரகாசமான சருமத்தை பெற இதனை வாரத்திற்கு இரு தடவை செய்வது சிறந்தது.

தேவையான பொருட்கள்:
• ஒரு வெங்காயம்.
• 3 மேசைக்கரண்டி தயிர்.

பயன்படுத்தும் முறை:
வெங்காயத்தை தோலை நீக்கி சிறிதாக வெட்டி பசையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் தயிரை சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

4. பருக்களை நீக்குவதற்கு:
வெங்காயத்தை பயன்படுத்துவதனால் சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தளும்புகளை நீக்கும்.

தேவையான பொருட்கள்:
• 1 வெங்காயம்.
• 1 தேக்கரண்டி தேன்.
• 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு.

பயன்படுத்தும் முறை:
ஒரு வெங்காயத்தை வெட்டி பசையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் எலுமிச்சை, தேனை சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும். பாதிக்கப்பட்ட இடத்தில் இதனை தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

5. உலர்ந்த சருமத்திற்கு:
வெங்காயத்தை பயன்படுத்துவதனால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கின்றது.

தேவையான பொருட்கள்:
• பாதி வெங்காயம்.
• ஒரு கரண்டி ஓட்ஸ்.
• ஒரு கரண்டி தேன்.
• ஒரு கரண்டி முட்டை மஞ்சல் கரு.

பயன்படுத்தும் முறை:
வெங்காயத்தை வெட்டி அரைத்து எடுத்துக் கொள்லவும். அதில் ஓட்ஸ் பவுடர், தேன், முட்டை மஞ்சள் கரு சேர்த்து கலவையாக எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு இரு தடவைகள் செய்வது சிறந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *