வடமலைபவன் வடகறி, tami samayal

ஆரோக்கிய சமையல்

திருப்பத்தூரில் எத்தனை சைவ உணவுகள் தோன்றினாலும் வடமலை பவன் தரத்திற்கும் சுவைக்கும் ஈடு வேறில்லை என வலுவாக கூறலாம்.

இந்த கடையில் வடகறி மற்றும் இட்லி சேர்த்து வாங்கி , இட்லி துண்டங்களை வடகறியில் துவட்டி வாயிலில் போட்டால் நமது வாய் தாமாக ம்ம்ம்ம் … ம்ம்ம்ம் போடும் பாருங்கள் அப்படி ஒரு ஆனந்த சுவை !!!!

அந்த சுவையில் லயிக்கவே யாம் இந்த கடைக்கு செல்வது எமது வழக்கம் !!!

இங்கு செட்தோசை வடகறி உடன் பரிமாறப்படும். இட்லியுடனும் பரிமாறபடுகிறது.

சென்னை போன்ற நகரில் வடகறி செய்வது நேற்று மாலை போட்ட மீந்து போன வடை, பஜ்ஜி போன்ற பதார்த்தங்கள் மூலம் ஆகும்.

ஆனால் சுவையில் நமது சுவை நரம்புகள் அனைத்தும் டிஸ்கோ டான்ஸ் ஆடும்

தேவையான பொருட்கள்

வடை செய்ய
கடலை பருப்பு 1 கப்
சின்ன வெங்காயம் 14
சோம்பு 1 தேக்கரண்டி
வரமிளகாய் 5
இஞ்சி 1 இன்ச்
கறிவேப்பில்ல ஒரு கொத்து
கொத்தமல்லி இலைகள் கொஞ்சம்
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் பொறிப்பதற்கு தேவையான அளவு

வடகறி செய்ய
சின்ன வெங்காயம் 18 ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
தக்காளி 3 ( விழுதாக அரைத்தது)
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4
முழு முந்திரி பருப்பு 15 ( விழுதாக அரைத்தது )
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
பச்சை மிளகாய் விழுது 1 மேஜைக்கரண்டி
வேகவைத்த பச்சை பட்டாணி 1/2 கப்
வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி + 1 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 3/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 2 தேக்கரண்டி
திக்கான தேங்காய் பால் 1/2 கப்
புதினா இலைகள் 1 கைப்பிடி
கொத்தமல்லி இலைகள் கொஞ்சமாக
கறிவேப்பில்ல கொஞ்சமாக
பொறித்த மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி

செய்முறை

1. கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

2. அதனுடன் கடலெண்ணய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக மிக்ஸியில் நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

3. பிறகு வடச்சட்டியில் பொறிப்பதற்கு தேவையான அளவிலான மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள வடை மாவை கிள்ளி சிறிய சிறிய உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக ஆனதும் எடுத்து விட வேண்டும். கவனம் தேவை முறுகலாக விட கூடாது.

4 அதன் பிறகு பொறித்த உருண்டைகளை உடைத்து விட வேண்டும்.

5. பிறகு வடச்சட்டியில் பொறித்த மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க நன்றாக காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க , அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. இப்பொழுது அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

7. அதில் பச்சை மிளகாய் விழுதை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும், அதில் அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

8. இப்பொழுது அதில் முந்திரி விழுதையும் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

9. அதில் ஒரு கைப்பிடி புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

10. அதில் தக்காளி விழுதை சேர்த்துகோங்க , அதில் வரமிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம்மசாலா தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

11. அந்த சமயத்துல திக்கான தேங்காய் பாலை ஊற்றி நன்றாக சிறுதீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

12. அதில் தேவையான அளவிலான தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் , அதில் பொறித்து உடைத்து வைத்துள்ள வடையை போட்டு நன்றாக சிறுதீயிலே வேகவைக்க வேண்டும். அதில் வேகவைத்துள்ள பச்சை பட்டாணியையும் சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலே கொதிக்க வைக்க வேண்டும்.

13. இப்பொழுது காரம் மற்றும் உப்பு சரிபார்த்த பின்னர் கிரேவியின் கெட்டி தன்மையை நமக்கு ஏற்றவாறு சுண்ட வைத்து இறக்கி கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *