ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் குழம்பு!,tamil samayal

ஆரோக்கிய சமையல்

தேவையானவை:

மட்டன் – 1/2 கிலோ, நறுக்கிய தக்காளி – 3, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் -200கிராம், நீளமாக கீறிய பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – கொஞ்சம், இஞ்சி & பூண்டு பேஸ்ட்- 2, டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – கொஞ்சம், உப்பு – தேவைக்கேற்ப, மசாலா பொருட்கள் : பட்டை – 1 துண்டு, கிராம்பு – 3, ஏலக்காய் – 3, சோம்பு – 1 டீஸ்பூன்.

ரமலான் ஸ்பெஷல் மசாலா பொடிக்கு : வரமிளகாய் – 7 அல்லது 8, சீரகம் – 1 தேக்கரண்டி, சோம்பு – 1டேபிள் ஸ்பூன், மல்லி – 4 டேபிள் ஸ்பூன், பட்டை – மூன்று துண்டுகள், மிளகு – 1டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 4 அன்னாசிப்பூ – 1

தேங்காய் மசாலாவிற்கு: தேங்காய் – 1 கப், சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, சிறிது நீர் விட்டு மென்மையாக பேஸ்ட் போல அரைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஸ்பெஷல் மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கவும் அதை மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைக்கவும்.. பின்பு சின்ன வெங்காயத்தை உரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமா வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும் பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும்..

வரை வதக்கி, ஸ்பெஷல் மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 அல்லது 6 விசில் வரும் வரை குறைவான தீயில் 15-20 நிமிடம் குக்கரை அடுப்பிலேயே வைத்து, பின்பு இறக்கவும்.. பிறகு குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் மசாலாவை சேர்க்கவும் தேவையான அளவு நீர் ஊற்றி, 20 நிமிடங்கள்..

எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க வைத்து கொத்த மல்லித் தழைகள் தூவி இறக்கவும்.. கமகம ரமலான் ஸ்பெஷல் மட்டன் குழம்பு ரெடி.. சாதம், இட்லி, ஆப்பம், தோசை எல்லாவற்றிற்கும் இதை சேர்த்து சாப்பிடலாம்..விரும்பினால் குழம்பில் அவித்த முட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.. வீட்டில் செய்து சாப்பிட்டு சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *