ரஜினி பிறந்தநாளில் விருந்து கொடுக்கும் தர்பார் படக்குழு

சினிமா

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தர்பார் படக்குழு ரசிகர்களுக்குச் சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொலிஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் சுவரொட்டி சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்விட்

ரஜினியின் பிறந்தநாளை (12-12-2019) முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட இருப்பதாக இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *