யாஷிகாவின் பேக்லெஸ் போட்டோவை வறுத்தெடுத்த ட்விட்டர்வாசிகள்.!

சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. சொல்லப்போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஓவியாவை விட இவருக்கு தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

அதே போல சென்னை டைம்ஸ் வெளியிட்ட டாப் 15 சின்னத்திரை பிரபலங்கள் பட்டியலில் யாஷிகா ஆனந்த்முதல் இடம் பிடித்திருந்தார். இதற்கு முக்கிய காரணமே வெறும் 19 வயதான இந்த இளம் நடிகை பல இளைஞர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறார்.

எப்போதும் சமூக வழிதள்த்தில் ஆக்டிவாக இருந்து யாஷிகா ஆனந்த், அடிக்கடி தனது கவர்ச்சியான புகைபடங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் முதுகு முழுவதும் தெரியும்படி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் யாஷிகா. இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் சகட்டு மேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *