யார் இந்த கோத்தபய ராஜபக்சே? தமிழர்களுக்கு எதிரானவரா? சர்ச்சைகளும் வெற்றியின் பின்னணியும்

சினிமா

 

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பொது ஜன முன்னணி கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அவர் தான் அடுத்த ஜனாதிபதி என்பது உறுதியாகவிட்ட நிலையில், அவரைப் பற்றி சில தகவல்களை பார்ப்போம்.

ஜனாதிபதியாக பதிவியேற்கவுள்ள கோத்தபய ராஜபக்சே அந்நாட்டு ராணுவத்தை கட்டமைத்தவர், பொருளாதாரத்தை மாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.

முன்னாள் ராணுவ தளபதியும், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சே, மிகவும் கண்டிப்பானவர்.

இலங்கையில் தமிழ் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தியது இவர்தான், அதேபோல் அங்கு போர் குற்றங்களை செய்ததாக குற்றஞ்சாட்டப்பவரும் இவர் தான், இலங்கை போரின் போது ஐநாவிற்கு எதிராக செயல்பட்டது, ஊடகங்களை முடக்கியது, பெண்களை துன்புறுத்தியது என்று இவருக்கு எதிராக உலக அளவில் நிறைய புகார் எதிரொலித்தன.

அமெரிக்க கடவுச் சீட்டு மூலம் வலம் வந்த கோத்தபய ராஜபக்சே, தேர்தலில் நிற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் அதை துறந்தார். தேர்தலில் நிற்க வேண்டும் என்பதற்காக அவர் தன்னுடைய அமெரிக்க கடவுச்சீட்டை துறந்தார்.

இவருக்கு எதிராக அதிகமான புகார்கள் மற்றும் சர்ச்சைகள் இருக்கின்றன. இவர் பேசுவதை விட அதிகமாக செயலில் ஈடுபடுவார் என்று கூறுவர்.

இலங்கை பொருளாதார ரீதியாக வளர இவரும் ஒரு காரணம் என்று அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக புத்த மதத்தை சேர்ந்த மக்களுக்கு இவர் ஆதரவாக செயல்படுகிறார் என்ற புகாரும் இருக்கிறது.

ஆனால் இவர், தேர்தல் பிரசாரத்தின் போது, தேசியவாதம், ஒரே நாடு, சிங்கள ஆதரவு, புத்த மத ஆதரவு என்று மெஜாரிட்டி மக்களை கருத்தில் கொண்டு பிரசாரம் செய்தார் என்று கூறப்படுகிறது.

இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் தற்போது அவருக்கான மக்கள் ஆதரவும் வெளிவந்துள்ளது. தன்னுடைய குடும்பத்தை அரசியலுக்குள் கொண்டு வர மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே பிரசாரத்தில் தெரிவித்தார்.

ஆனால் கண்டிப்பாக இவர் அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக விரைவில் நியமிப்பார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சீனாவிற்கு மிகவும் நெருக்கமான இவர் பல முறை சீனாவிற்கு சென்றிருக்கிறார். அதேபோல் அமெரிக்காவிற்கும் இவர் நெருக்கமான நபர் என்றும், ஆனால் இந்தியாவுடன் அந்தளவிற்கு இவர் நெருக்கம் இல்லை என்ற தகவலும் உண்டு.

இவர் தமிழர்களுக்கு எதிரானவர் என்ற புகார் இருக்கிறது. இவர் ஆட்சிக்கு வந்த பின் தமிழர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பார்? அல்லது அவர்களை அரவணைத்து செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது தமிழர்களுடன் நெருக்கமாக இருப்பேன் என்று இவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *