மேஷம், விருச்சிகம் ராசிக்காரங்களுக்கு வெங்காயம் ஏன் பிடிக்கும் தெரியுமா?

ஜோதிடம்

சென்னை: உணவு ருசியாக இருந்தால் எல்லோருமே ஒரு தட்டு சேர்த்தே சாப்பிடுவார்கள். நேரத்திற்கு சாப்பிட்டு நேரத்திற்கு தூங்கி எழுந்தாலே போதும் நோய் தாக்காது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் எந்தெந்த மாதிரியான உணவு பிடிக்கும் எப்படி சாப்பிடுவார்கள் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு இப்போது விலை உச்சத்தில் உள்ள வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவார்களாம், இந்த இரண்டு ராசிக்காரர்களின் குணாதிசயங்களையும் பிடித்தமான உணவுகளையும் பார்க்கலாம்.

மேஷம் நெருப்பு ராசி. கால புருஷ தத்துவத்தின் முதல் ராசி. இந்த ராசிக்கு அதிபதி செவ்வாய். சூரியன் இந்த ராசியில்தான் உச்சம் பெறுகிறார். சனி இங்கு தான் நீச்சம் பெறுகிறார். மிகவும் சுறுசுறுப்பு உடையவர்களாகவும், முன்னேறத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். உடல் உறுப்புகளில் தலையைக் குறிப்பது இந்த ராசிதான் மேஷம் இல்லறத்தில் இன்பம் காண துடிப்பார்கள். இவர்களிடம் பழகியவர்கள் நல்ல நண்பராக இருப்பார்கள் தியாக மனம் படைத்த வாழ்க்கை துணை கிடைக்கும். முன்னோர்கள் சொத்து கிடைத்தாலும் அதனை மறுத்து விடுவார்கள். கண்ணியம் மிகுந்த வாழ்க்கை இவருக்கு வழிகாட்டியாக இருக்கும். தன் உடன்பிறந்தவர்களுக்காக விட்டு குடுப்பார்கள்.

வெங்காயம் வெள்ளரிக்காய் மேஷ ராசிக்கார்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. வெகுளியாகவும், கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவார்கள்.

காரமான உணவு மேஷ ராசியில் பிறந்தவர்கள் நாக்குக்கு ருசியாக கார சாரமாக சாப்பிட நினைப்பார்கள். வெங்காயம் சிவப்பு முள்ளங்கி போன்றவைகளை சாப்பிடுவார்கள். கீரை வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு, பரங்கி காய், வெள்ளரிக்காய், கோஸ், பீன்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். காரமான மசாலா உணவுகளை சாப்பிடுவார்கள். மசாலா குறைவான உணவுகளை சாப்பிட்டால் போதும் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அல்சர் போன்ற வயிறு கோளாறுகள் எட்டிப்பார்க்காது.

வீரமான ராசி விருச்சிகம் ‌ஜலராசி. காலபுருஷனின் எட்டாம் இடம் இங்கு குருபகவான் சனிபகவான் புதன்பகவான் நட்சத்திரம் உண்டு. நீர் ராசி, மனதிற்குள் ஆயிரம் இருந்தாலும் ஒரு பங்கு கஷ்டத்தை மட்டுமே வெளியில் சொல்வார்கள். எந்த விஷயமும் முன்னாடி செய்ய மாட்டார்கள் தேள் பின்னாடி தான் விஷம் இருக்கும் இது போல தான் இவர்கள் செயல் பாடுகள் இருக்கும்

ருசியான உணவு இது செவ்வாய் வீடு எதற்கும் போராடும் குணம் உள்ளவர்கள் இங்கு மனோகாரகர் சந்திரன் நீசம் அடைகிறார். உணவு வகையில் அதிக கவனம் செலுத்தும் இவர்கள் சத்து பொருள் அடங்கிய, உடல் நலத்திற்கேற்ற பொருளையே சாப்பிடுவார்கள். சிகப்பு முள்ளங்கி, வெங்காயம், சிவப்பு கோஸ், காலி பிளவர், நாவல் பழம், முந்திரி பழம், கீரை வகைகள், பழ வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த ராசிக்காரர்கள் காரமான உணவை தவிர்த்து விடுவது நல்லது. ஏனென்றால் காசு கொடுத்து சூனியம் வைப்பது போல காரமான மசாலா உணவுகளை சாப்பிட்டால் அல்சர் வந்து ஒட்டிக்கொள்ளும் கவனம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *