மெலிந்த முடியை அடர்த்தியாக்கும் ஆயுர்வேத அழகுக் குறிப்புகள்

மருத்துவம்

முடி அடர்த்தி இல்லாமல் இருந்தால் அது எந்த மாதிரியான முகத்துக்கும் செட்டாகாது. நல்ல அழகான முகத்தையும் கெடுப்பது போலாகிவிடும். நல்ல கூந்தல் அலங்காரங்கள் ஏதும் செய்ய முடியாது. குதிரைவால், லூஸ் ஹேர் தவிர்த்து வேறெதுவும் செய்ய இயலாது.

முக்கியமாக முடி அடர்த்தியில்லாதவர்கள் எண்ணெய் வைக்க மாட்டார்கள். இன்னும் அதிகமாக ஒல்லியாய் கண்பிக்கும் என்பதால்தான். ஆனால் எண்ணெய் வைக்காததால் மேலும் அடர்த்தி குறைந்து வலுவில்லாமல் முடி குறைய ஆரம்பிக்கும்.

எண்ணெய் தினமும் ஒரு கால் ஸ்பூனாவது ஸ்கால்ப்பில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் தலை சூட்டினால் முடு உதிர்வதை தடுக்கும். மேலும் முடி அடர்த்தியாக்க இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். இவை கூந்தல் வேர்களை வலுப்பெறச் செய்யும் பொருட்கள். ஆயுர்வேததில் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களை பயன்படுத்திதான் இந்த குறிப்புகளை சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

வெந்தயம் மற்றும் சீரகம் :

தேவையானவை :

வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்

சீரகம்- 1 ஸ்பூன்

நீர்

பயன்படுத்தும் முறை :

வெந்தயம் மற்றும் சீரகத்தை முந்தைய இரவே ஊற வைத்து அதனை மறு நாள் ஊற வைத்த நீருடனே அரைத்து தலையில் தடவுங்கள். உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருந்தால் இவற்றுடன் சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும். முடி அடர்த்தியாக இது மிக அற்புத தீர்வாக இருக்கும். வாரம் இரு நாட்கள் அல்லது தினமுமே செய்யலாம்.

எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் :

தேவையானவை :

தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை :

தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையின் வேர்ப்பகுதியில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் ஒருமுறை அல்லது நேரம் கிடைத்தால் வாரம் இருமுறை செய்து வந்தால் முடி அடர்த்தி பெறும்.

கற்றாழை மற்றும் பாதாம் எண்ணெய் :

தேவையானவை :

கற்றாழை ஜெல் – 5 ஸ்பூன்

பாதாம் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை :

பாதாம் எண்ணெயில் கற்றாழை ஜெல்லை நன்றாக கலக்கி தலையில் தடவுங்கள். சில நிமிடங்கல் மசாஜ் செய்யவும். 1 மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். இது கூந்தலுக்கு மென்மையை தந்து நல்ல கண்டிஷனராக விளங்குகிறது.

விளக்கெண்ணெய் மற்றும் தேன் :

தேவையானவை :

தேன்- 3 ஸ்பூன்

விளக்கெண்ணெய்- 5 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை :

விளக்கெண்னெயை சூடுபடுத்தி அதில் தேன் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள்.

கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் :

தேவையானவை :

கருவேப்பிலை – ஒரு கைப்பிடி

தேங்காய் எண்ணெய் – கால் கப்

பயன்படுத்தும் முறை :

கருவேப்பிலையை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் என்ணெயை சூடுபடுத்தி அதில் கருவேப்பிலை விழுதைப் போட்டு சலசலப்பு அடங்கும் வரை குறைந்த தீயில் வைக்கவும்.

பின்னர் அடுப்பை அணைத்து, லேசாக சூடு ஆறியதும் அதனை தலைமுழுவதும் தடவ வெண்டும். 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அதன் பின் அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். வாரம் ஒரு நாள் போதும். இது இள நரையையும் போக்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *