மெரினாவில் காற்றுவாங்கச் சென்ற பெண் பத்திரிகை ஊழியருக்கு நேர்ந்த சோகம்!

உடற்பயிற்சி

சென்னை மெரினாவில் தோழியுடன் பேசிக்கொண்டிருந்த பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறிய வடமாநில வாலிபர்களை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.

marina

marina

சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் நிம்மி (பெயர் மாற்றம்). இவர் தன் தோழியுடன் நேற்று இரவு மெரினா கடற்கரைக்குச் சென்றார். கடற்கரையில் வாக்கிங் சென்று பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சிவப்பு நிற சட்டை அணிந்த வடமாநில வாலிபர் ஒருவர், நிம்மியிடம் உங்களுக்கு இந்தி தெரியுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு நிம்மி தெரியாது என்று பதிலளித்துள்ளார். அந்த வாலிபரின் அருகில் இன்னொருவரும் நின்றுகொண்டிருந்தார்.

pwd office

இந்தச் சமயத்தில் நிம்மியின் பின்புறம் வழியாகச் சென்ற சிவப்பு நிற சட்டை அணிந்த வாலிபர், திடீரென அவரிடம் அத்துமீறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிம்மி, சத்தம் போட்டார். உடனடியாக சிவப்பு நிற சட்டை அணிந்த வாலிபரும் அவருடன் வந்தவரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். நிம்மியின் சத்தம் கேட்டு பாதுகாப்புப் பணியிலிருந்த பாண்டியராஜன், தமிழரசன், பெருமாள் ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீஸார் நிம்மியிடம் என்ன நடந்தது என்று கேட்டனர். அப்போது நடந்த விவரத்தை நிம்மி போலீஸாரிடம் தெரிவித்தார். கடற்கரையில் நிம்மியிடம் அத்துமீறிய சிவப்பு நிற சட்டை அணிந்த வாலிபர் மற்றும் அவரின் நண்பரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நிம்மி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவப்பு நிற சட்டை அணிந்த வட மாநில வாலிபரின் பெயர் சித்து (32), அவரின் நண்பர் ரஞ்சன் (27). இவர்கள் இருவரும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கட்டட வேலைக்காக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே தங்கியிருப்பதும் தெரியவந்தது.

நிம்மியிடம் போலீஸார் விசாரித்தபோது அவர், பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளார். சித்து மற்றும் ரஞ்சன் ஆகியோரை காவல் நிலையத்தில் போலீஸார் தங்கள் பாணியில் கவனித்தனர். தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தியதில் போதையில் அவ்வாறு தவறு செய்துவிட்டதாகவும் மன்னித்து விட்டுவிடும்படி அவர்கள் கெஞ்சியுள்ளனர். விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா சதுக்கம் போலீஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *