மூன்று குழந்தைகள் இருப்பது போன்ற வயிற்றுடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்: ஸ்கேனில் தெரியவந்த உண்மை!

மருத்துவம்

சீனாவில் கர்ப்பத்தில் மூன்று குழந்தைகள் இருப்பது போன்ற வயிற்றுடன் மருத்துவமனைக்கு சென்ற பெண் ஒருவர், தன் வயிற்றில் இருப்பது 35 கிலோ எடையுள்ள கட்டி இருப்பது தெரியவர, அதிர்ச்சியடைந்தார்.

Ms Huang (59) என்ற அந்த பெண்ணின் வயிறு பெரிதாகிக் கொண்டே வந்த நிலையிலும், அவர் மருத்துவமனைக்கு செல்லாமலே இருந்திருக்கிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட, அதற்குப்பின் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அவர்.

அதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்ய, அவரது உள்ளுறுப்புகள் எதையுமே பார்க்க முடியவில்லையாம்.

அந்த அளவுக்கு பெரிய ஒரு கட்டி அவரது வயிற்றில் இருந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 35 கிலோ எடையுள்ள அந்த கட்டிக்குள், 33 லிற்றர் கருப்பு நிற திரவம் இருந்துள்ளது.

அந்த கட்டியை அகற்றியுள்ள மருத்துவர்களில் ஒருவர், தனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய ஒரு கட்டியை தான் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

கட்டி அகற்றப்பட்ட நிலையில் தற்போது உடல் நலம் தேறி வருகிறார் Ms Huang.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *