முதுகில் பருக்கள் வருவது ஏன்? அதை எப்படி அகற்றுவது???, Why are pimples on the back? How to get rid of it ???

அழகுக் குறிப்புகள்

பருக்களின் தொல்லை அல்லது பிரச்சனை இருப்பவர்களில் 61% பேருக்கு முதுகு மற்றும் மார்பிலும் பருக்கள் ஏற்படும் பிரச்சனை இருக்கிறது. பருவ வயதில் உங்களுக்கு பருக்கள் தோன்றவில்லை என்றால் நீங்கள் புண்ணியம் செய்தவராக தான் இருக்க வேண்டும். பருக்கள் வந்தால் எவ்வளவு தொல்லை ஏற்படும் என்பது பருக்களால் அவதிப்படுபவர்களுக்கு மட்டுமே தெரியும்.

முகத்தில் ஏற்படும் பருக்களை விட முதுகு மற்றும் மார்பில் ஏற்படும் பருக்களை அகற்றுவது தான் கடினம். சிலர் இதைப்பற்றி வெளியில் கூறுவது இல்லை, சிலர் இந்த முதுக மற்றும் மார்பு போன்ற இடங்களில் பருக்கள் தோன்றினால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதன் மூலம் எரிச்சல் அல்லது அரிப்பு அதிகமாகும் போதுதான் அவற்றின் மீது அக்கறை எடுக்க ஆரம்பிக்கிறார்கள்…

முதுகில் பருக்கள் ஏற்படுவது ஏன்?

முகத்தில் ஏற்படுவது போலவே தான் முதுகிலும் பருக்கள் ஏற்படுகின்றன. உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் இதற்கொரு முக்கிய காரணமாக இருக்கிறது. முகம், தோள், முதுகு மற்றும் புட்டம் போன்ற இடங்களில் அதிகமாக எண்ணெய் சுரப்பிகள் இருக்கின்றன. எனவே, தான் இவ்விடங்களில் பருக்கள் அதிகம் ஏற்படுகின்றன என சரும நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆண்களுக்கு தான் அதிக வாய்ப்பு

அடிப்படையாக பருக்கள் ஏற்படுவதற்கு காரணம் ஹார்மோன்களின் இயற்கை தான். பொதுவாக பெண்களுக்கு முகத்தில் அதிகமாகவும், ஆண்களுக்கு முதுகில் பருக்கள் அதிகமாகவும் தோன்றுகின்றன.

முதுகில் பருக்கள் ஏற்படுவதற்கான காரணிகள்

ஏதேனும் உராய்வு, வெப்பம், சூடு போன்றவை, ஷேவிங் அல்லது வேக்ஸிங் செய்வதால், பொடுகு, பல்பையுரு கருப்பை நோய், ஊறல் தோலழற்சி போன்றவை இதற்கு காரணியாக இருக்கின்றன.

சிகிச்சை

முகத்தில் ஏற்படும் பருக்களை விட, முதுகில் ஏற்படும் பருக்களை அகற்றுவது சற்று கடினம் என சரும மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இந்த இடங்களில் சருமம் சற்று தடிமனாக இருக்கும். பருக்களுக்கு பொதுவான சிகிச்சை அளித்து சரி செய்ய முடியாது. அவரவர் சரும தன்மையை பொருத்து தான் சிகிச்சையளிக்க வேண்டும்.

எப்படி பாதுகாத்துக் கொள்வது

பருக்கள் ஹார்மோன்களின் இயற்கையினால் ஏற்படுவது. இதை வராமல் தடுக்க முடியாது ஆனால், அதிகமாகாமல் தடுக்கலாம். பருக்கள் ஏற்படும் ஆரம்பக் காலத்திலேயே இதற்கு தீர்வு காணுங்கள். ரெட்டினால் மற்றும் பென்சோல் பெராக்சைடு கிரீம்கள் நல்ல ஆன்டி-பிம்பிள் கிரீம்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். லேசர் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் அதற்கு பிறகு கற்றாழை ஜெல் மற்று ஐஸ் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறப்படுகிறது.

பருக்களின் வடுக்களை போக்குவதற்கு

பருக்களின் காரணமாக சருமத்தில் வடுக்கள் ஏற்படுவது என்பது இயற்கை தான். இதை போக்க “Derma roller”, “Rf pixel”, “Co2 lasers” போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளலாம் என்று சரும மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *