முகம் பளபளக்க, நாள் முழுக்க தேவதையாய் ஜொலிக்க ஒண்ணு செய்தா போதும்…

அழகுக் குறிப்புகள்
அழகான முகத்தில் கூடுதலாய் சில பராமரிப்பு செய்து முகத்தை அழகாக்கி காட்டுபவர்கள் உண்டு. முகத்தில் இருக்கும் பருக்கள், தழும்பு கள், கரும்புள்ளிகள், குரு போன்ற குறைகள் தெரியாமல் இருக்க மேக்கப் மூலம் மறைப்பவர்கள் சிலர் உண்டு. பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் நாள் முழுவதும் அழகாய் வலம் வர நினைப்பவர்கள் சிறிய பராமரிப்பை கூடுதலாக செய்வதன் மூலம் அன்று முழு வதும் முகம் பளிச்சென்று பிரகாசமாய் இருக்க வலம் வரலாம். என்ன செய்வது என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

​முகம் பராமரிப்பு

முகத்தில் அழுக்குகள் சேர்ந்து உருவாகும் பருக்கள், சிறிய குரு, கரும்புள்ளிகள், தழும்புகள், கருவளையம் போன்ற பிரச்சனைகளில் அதிகமானவற்றையோ அல்லது இதில் ஒன்றையாவது சில பெண்கள் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பிரச்சனைகளோடு முகத்துக்கு மேக்கப் போடும் போது அவை அப்போதைக்கு அதிக அழகை கூட்டி காண்பித்தாலும் நேரம் செல்ல செல்ல முகத்தில் பொலிவை இழக்க செய்கிறது. இதனால் முகம் சோர்வாக இருக்கிறது.

குறிப்பாக விஷேஷங்களின் போதும் பண்டிகை காலத்திலும் இத்தகைய பிரச்சனையை சந்திக் கிறார்கள். ஆனால் கூடுதலாக சற்று நேரம் ஒதுக்கி முகத்துக்கு ஃபேக் போடுவதன் மூலம் சருமம் மிருதுவாகி நாள் முழுவதும் அழகை தக்க வைத்து காட்டுகிறது. அதிலும் வீட்டில் இருக்கும் பொருள் களே போதும் என்று சொல்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள். அவை என்னென்ன பொருள்கள் என்று பார்க்கலாமா?

​பன்னீர் ரோஜா பொடி

பன்னீர் இன்று அழகு குறிப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள். எந்த ஃபேஸ் ஃபேக் உபயோ கப்படுத்தும் போதும் இவை இல்லாமல் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை என்பதே உண்மை.

இந்த பன்னீர் இதழ் பொடியானது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பொடி இல்லாதவர்கள் கடைகளில் விற்கும் இலேசான ரோஸ் நிறமுள்ள பன்னீர் ரோஜா (இதழ்கள் மென்மையாக இருக் கும். பெங்களூர் மற்றும் கலர் ரோஜா இல்லை )வை வாங்கி பால் விட்டு அரைத்து கொள்ளுங்கள்.

இதனுடன் காய்ச்சாத பால், கற்றாழை சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து முகம், கழுத்து பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்யுங்கள். பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை மிதமான நீரில் கழுவி துடைத்தால் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

​சந்தனப்பொடி

அசல் சந்தனப்பொடி நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும். இவை இல்லாத பட்சத்தில் வீட்டில் சந்தன கட்டை ஒன்றை வாங்கி வைத்துகொள்ளுங்கள். இதில் பால் தெளித்து உரைத்து உரைத்து சந்தனத்தை சேமியுங்கள். சற்று நேரம் பிடிக்கும். ஒரு 5 டீஸ்பூன் அளவு வந்ததும் அதில் பால், பன்னீர், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

சந்தனத்தை பொறுத்தவரை அது ஒன்றே போதுமானது. ஆனால் அதை முகத்தில் தடவியதும் அவை காய்ந்துவிடும். அதனால் கூடுதலாக இதை சேர்த்து முகத்தில் தடவுங்கள். அவை காய காய பஞ்சில் பாலை தொட்டு முகத்தில் ஒற்றி எடுங்கள். சரியாக 20 நிமிடங்கள் கழித்து முகத்தை பாலில் கழுவி எடுங்கள். இப்போது பார்த்தால் முகத்தின் பளபளப்பு கணிசமாக கூடியிருக்கும்.

​பாசி பயறு

பாசிப்பயறு சருமத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும். முகத்தில் இருக்கும் அழுக்கை உடனடியாக நீக்க கூடியது இது. குளியல் பொடி அனைத்திலும் இதை சேர்க்க காரணமே இவை சருமத்தை மிருதுவாகவும் பொலிவாகவும் வைக்கும் என்பதால் தான். இந்த பாசிப்பருப்பு மாவுடன் கெட்டித்தயிர், கற்றாழை சாறு, பால் சேர்த்து நன்றாக குழைத்து கொள்ளுங்கள்.

முகம், கை, கழுத்து பகுதியில் தடவி ஃபேஸ் பேக் போல் போட்டு 30 நிமிடங்கள் வரை காய விடுங் கள். பிறகு பால் நனைத்த பஞ்சில் முகத்தை துடைத்து எடுத்துவிடுங்கள். இப்போது மாய்சுரைசர் போட்டு இலேசாக மசாஜ் செய்யுங்கள். முகம் புத்துணர்ச்சியாக இருக்கும். முகத்தில் இருக்கும் தழும்புகள், பருக்கள் போன்ற அடையாளம் மறைந்து முகத்தில் தனி களை உண்டாகும்.

​வெந்தயம்

வெந்தயம் ஆரோக்கியத்திலும் அழகு தருவதிலும் அற்புத குணங்கள் நிறைந்தவை. வெந்தயத்தை மிக்ஸியில் பொடித்தோ அல்லது வெந்தய பொடியோ இல்லாதவர்களும் வெந்தயத்தை உபயோகிக் கலாம். வெந்தயத்தை ஊறவைத்து மூன்று மணிநேரத்துக்கு பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளுங் கள். இதை கையில் எடுக்கும் போதே வழவழப்பு தன்மையை உணரலாம்.

இதனுடன் பால் சேர்த்து மேலும் க்ரீம் போல் குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி வர வும். இவை வழவழப்பு மிகுந்திருப்பவை என்பதால் இவை முகத்தில் சீக்கிரம் காயாது. எனினும் 25 நிமிடங்கள் கழித்து முகத்தை பாலில் கழுவினால் உங்கள் கை முகத்தில் படும் போதே முகம் வழுக்கி கொண்டு போகும்.

தக்காளி

தக்காளியை துண்டு துண்டாக வெட்டி அதில் சர்க்கரை தோய்த்து முகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். ஒரு பத்து நிமிடங்கள் இப்படி செய்தால் போதும் பொலிவிழந்த முகம் களையாகும். உடனடியாக வெளியே செல்வதற்கு ஏற்ற பளபளப்பான முகத்தை அடுத்த அரைமணி நேரத்தில் பெறலாம்.

பண்டிகை காலத்தில் உடனடியாக தயாராக நினைப்பவர்களுக்கு இவை சரியான தீர்வாக இருக் கும். இந்த ஐந்தில் ஒன்றை பயன்படுத்திய பிறகு முகத்துக்கு மேக்கப் செய்யுங்கள். நாள் முழுவதும் முகம் பளிச்சென்று இருக்க அழகு தேவதையாக வலம் வருவீர்கள். இயற்கையாய் பெறும் அழகுக்கு எப்போதும் கூடுதல் அழகு உண்டு தானே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *