மீண்டும் மருத்துவ துறையில் இணைந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரபல நடிகை..! குவியும் வாழ்த்துக்கள்..!!

சினிமா

பிரபல நடிகை ஒருவர் கொரோனா வைரஸில் பாதிக்கப் பட்ட நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்ட விடயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சிஹா மல்ஹோத்ரா.

இவர் டெல்லியில் உள்ள கொரோனா வைரஸ் வார்டில் தானாக முன்வந்து இணைந்துகொண்டுள்ளார். டெல்லியில் பள்ளி படிப்பை முடித்த ஷிஹா வர்தமான் மஹாவீர் மருத்துவ கல்லூரியில் தனது மருத்துவ படிப்பை முடித்ததுடன் ஃசப்தார்ஜுங் மருத்துவ மனையில் சுமார் 5 வருடங்கள் மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளார்.

இதன் போது திரைப்பட வாய்ப்பு வந்ததால் மருத்துவ துறைக்கு டாடா சொல்லிவிட்டு நடிக்க சென்றார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மக்களுக்கு உதவுவது தனது கடமைகளில் ஒன்று என கூறியுள்ள ஷிஹா தற்போது பணியில் இணைந்து சேவை செய்ய ஆரம்பித்துள்ளார்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *