மிளகுக்கீரை எண்ணெயின் சிறந்த 10 பயன்கள்!!!

மருத்துவம்

 

 

மிளகுக்கீரை எண்ணெயை மார்பில் தடவினாலோ அல்லது ஆவியாக்கி உள்ளிழுத்தாலோ, நாசி நெரிச்சல் மறைந்துவிடும்.
அஜீரணம்

மிளகுக்கீரை எண்ணெய் அஜீரணத்தை குணப்படுத்துகிறது. மிளகுக்கீரை எண்ணெயை உணவில் மணத்திற்காக பயன்படுத்தலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் ஒரு சில துளிகள் சேர்த்து உணவு சாப்பிட்ட பிறகு குடிக்கலாம். இயற்கையில் இரைப்பை குடல் வலி நீக்கியாக மிளகுக்கீரை எண்ணெய் இருப்பதால், உடலில் வாயு தொல்லையைக் குணப்படுத்த உதவும். மேலும் இது வயிறு மற்றும் குடல் பிடிப்பை சீராக்குகிறது, வயிறு சரியின்மைக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

சுவாச கோளாறு

மிளகுக்கீரை எண்ணெயில் உள்ள கற்பூரம் சுவாசக்குழாய் கோளாறுகளை நீக்குகிறது. சளி, இருமல் மேலும் கடுமையான புரையழற்சி, ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. மிளகுக்கீரை எண்ணெயை மார்பில் தடவினாலோ அல்லது ஆவியாக்கி உள்ளிழுத்தாலோ, நாசி நெரிச்சல் மறைந்துவிடும்.

தலைவலி

தலைவலியில் இருந்து நிவாரணம் பெற மிளகுக்கீரை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. மிளகுக்கீரை எண்ணெயை சில துளிகளை கைக்குட்டையில் தெளித்து சுவாசித்தாலோ அல்லது மணிக்கட்டில் தடவிக் கொண்டாலோ, நச்சரிக்கும் தலைவலி கூட நீங்கி விடும்.

மன அழுத்தம் மற்றும் வலி நிவாரணி

மிளகுக்கீரை எண்ணெய் மன அழுத்தம் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் பெற பயன்படுத்தப்படுகிறது. மேலும் மிளகுக்கீரை எண்ணெயை உடலுக்கு தேய்த்து குளித்தால், உடல் வலி நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

முடி

மிளகுக்கீரை எண்ணெய் முடி பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. மிளகுக்கீரை எண்ணெயை உச்சந்தலையின் மீது மசாஜ் செய்தால், பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கும்.

சருமம்

மிளகுக்கீரை எண்ணெய் பயன்படுத்தினால், பருக்கள் இல்லாத பொலிவான சருமத்தை பெறலாம்.

சிறுநீரக குழாய் நோய்த்தொற்று

மிளகுக்கீரை எண்ணெய் சிறுநீர் குழாய் நோய்த்தொற்று (Urinary tract infection) சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும். எனினும், முழுமையான அறிவியல் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்த நடத்தப்பட்டு வருகின்றன.

இரத்த ஓட்டம்

இந்த எண்ணெய் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

பற்கள் பராமரிப்பு

மிளகுக்கீரை எண்ணெய், கிருமிநாசினியாக இருப்பதால், பற்கள் பராமரிப்பில் பயனுள்ளதாக இருக்கிறது. பற்பசையில் மிளகுக்கீரை எண்ணெயை சிறு துளி சேர்த்து பல் துலக்கினால், துர்நாற்றம் மற்றும் பல் வலி பறந்தோடிவிடும். மேலும் கிருமிகளால் பாதிக்கப்பட்ட ஈறுகள் பிரச்சனையையும் இது போக்க வல்லது.

குடல் பிரச்சனை

மிளகுக்கீரை எண்ணெய்க்கு தசையை விரிய வைக்கும் தன்மை இருப்பதால், குடல் நோயை குணப்படுத்த உபயோகப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் சரியான வழிமுறை இன்னும் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *