மாலையை கழற்றி மணமகன் முகத்தில் வீசிய மணப்பெண்: ரணகளமான திருமண வீடு

சினிமா

திருமணம் முடிந்த சில நிமிடங்களிலே மணமகன் போதையில் தள்ளாடியதால் மணமகள் சண்டையிட்டு பிரிந்து சென்றுள்ளார்.

வடமாநிலங்களில் பெரும்பாலும் திருமணம் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகளின் போது பாம்பு நடனம் இடம்பெறுவது வழக்கம். இது அவர்களுக்கு பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்றாலும் கூட, தற்போது ஒரு திருமணம் தடைபடுவதற்கும் பாம்பு நடனமே காரணமாக அமைந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கும், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த மணமகனின் நண்பன், பாம்பு நடனம் ஆடுமாறு அழைத்துள்ளார். உடனே மணமகனும் சென்று நடனமாட ஆரம்பித்துள்ளார். அவருடன் சேர்ந்து நண்பர்கள், உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டு நடனமாட, திருமண வீடு கலகலப்பாக இருந்துள்ளது.

அங்கிருந்த ஒரு சிலர் மட்டும் மணமகனை மேடைக்கு அழைத்து வர முயற்சித்துள்ளனர். ஆனால் கட்டுப்பாட்டை மீறிய மணமகன் தரையில் விழுந்த எழுந்திரிக்க முடியாமல் நடனமாடியுள்ளார்.

அப்போது தான் மணமகன் மது அருந்தியிருப்பதை மணமகள் கவனித்துள்ளார். தாலி கட்டும்போது கூட மணமகன் போதையில் தான் இருந்துள்ளார் என்பதை கண்டறிந்த மணமகள், கோபத்தில் மாலையை கழற்றி எறிந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

இதனை பார்த்து பதறிப்போன மணமகனின் பெற்றோர், உறவினர்கள் என அங்கிருந்த பலரும் மணமகளையும் அவருடைய பெற்றோரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் மணமகள் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்ததால், பேசிக்கொண்டிருக்கும் போதே மணமகளின் கன்னத்தில் ஓங்கி மணமகன் அறைந்துள்ளார்.

இதனால் அங்கு பெரும் சண்டை ஏற்பட்டு களேபரமாக மாறியுள்ளது. இதற்கிடையில் சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார், இருதரப்பிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இறுதியில் மணமகனின் வீட்டார், பெண் சார்பில் கொடுத்த அனைத்து சீர்வரிசைகளையும் திருப்பி கொடுத்தனர்.

அதனை வாங்கிக்கொண்டு மணமகள் வீட்டாரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *