மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்… இந்த திகதியில் பிறந்தவர்கள் செம்ம அதிர்ஷ்டசாலியாம்!..

ஜோதிடம்

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எல்லோரிடமும் ரகசியத்தை காப்பாற்றும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பல வகையிலும் நற்பலன்கள் வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். அரசியல்துறையினருக்கு பதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிறன்று விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

பெரியோர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். கலைத்துறையினர் வெளிநாடு பயணம் ஏற்படும். அரசியல் துறையினர் மேலிடத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று நவக்கிரகத்தில் சந்திரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எந்த விஷயங்களையும் தனது விருப்பம் போல் மாற்றிக்கொள்ளும் திறன் படைத்த மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு: கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசியல் துறையினருக்கு பேச்சில் கவனம் தேவை.

பரிகாரம்: பெருமாளை வியாழக்கிழமை அன்று தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

யாருடைய மனதும் புண்படும்படி நடந்து கொள்ளத் தெரியாத நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல் துறையினருக்கு சுணக்க நிலை மாறும்.

பரிகாரம்: அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அடுத்தவர் மனதை சுலபமாக புரிந்து கொள்ளக் கூடிய ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் பிரயாணத்தில் தடங்கலை ஏற்படுத்தும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். தம்பதிகளுக்கு இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். கலைத்துறையினர் லாபம் பெறுவார்கள். அரசியல்துறையினருக்கு மனோ பலம் கூடும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிலும் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள்.

தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. அரசியல் துறையினருக்கு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று மஹாலக்ஷ்மி ஆலயத்திற்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கூர்மையான வார்த்தைகளை பிரயோகிக்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும்.

பரிகாரம்: சனிகிழமையன்று விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இடத்திற்கேற்றாற்போல் தனது விருப்பங்களை அமைத்துக்கொள்ளும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம்.

பரிகாரம்: தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

விவேகத்துடன் செயல் பட்டு தனது செயலில் வெற்றி காணும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலிடத்திலிருந்து வரும் செய்திகள் நல்ல செய்திகளாக வரும்.

பெண்களுக்கு சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள். ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *