மர ணப்படுக்கையில் மனைவியை நண்பனிடம் ஒப்படைத்த கணவன்! 21 ஆண்டுகளுக்கு பின்.. உணர்வுபூர்வமான காதல் கதை

சினிமா

கேரளாவில் 60 வயது கடந்த தம்பதிக்கு முதியோர் இல்லத்தில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அவர்களின் வாழ்க்கை கதை உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது.

திருச்சூரை சேர்ந்தவர் லஷ்மி அம்மாள் (65). இவரின் கணவர் 21 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்.

சமையல் பணி செய்து வந்த அவரின் உதவியாளராக கோச்சானியன் என்பவர் இருந்தார்.

அப்போது மரண படுக்கையில் கோச்சானியனிடம், என் இறப்புக்கு பின்னர் நீ தான் என் மனைவியை கவனித்து கொள்ள வேண்டும் என கூறிவிட்டு மரணமடைந்தார்.

பின்னர் ஆண்டுகள் உருண்டோடின. லஷ்மி மற்றும் கோச்சானியன் இருவர் மனதிலும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இருந்தது.

இந்த சூழலில் 11 மாதங்களுக்கு முன்னர் லஷ்மி அம்மாள் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

அதே போல வயது முதிர்வால் சாலையில் மயங்கி கிடந்த கோச்சானியனை சமூக ஆர்வலர்கள் மீட்டு அதே முதியோர் இல்லத்தில் இரு மாதங்களுக்கு முன்னர் சேர்த்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் வரும் 30ஆம் திகதி முதியோர் இல்லத்திலேயே திருமணம் நடக்கவுள்ளது.

அவர்களை வாழ்க்கை கதையை கேட்டறிந்த முதியோர் இல்லத்தின் தலைவர் ஜெயக்குமார் திருமணத்தை நடத்தி வைக்கவுள்ளார்.

இது குறித்து கோச்சானியன் கூறுகையில், எங்கள் விருப்பத்தை நனவாக்க அனைவரும் எங்களுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என கூறினார்.

ஜெயக்குமார் கூறுகையில், முதியோர் இல்லத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் நடத்தலாமா என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் மாநிலத்தில் உள்ள முதியோர் இல்லத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளுடன் பேசி இது போன்ற திருமணத்தை ஊக்குவிக்கலாம் என முடிவு செய்துள்ளோம்.

இந்த திருமணமானது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *