“மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு

உடல் ஆரோக்கியம்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட “மம்மிகளுடன்” ஒரு விசித்திரமான அனுபவத்தை வழங்குவதற்கு சீனா புது முயற்சியில் இறங்கியுள்ளது.

பல்லாண்டுகளாகப் புதைக்கப்பட்ட “மம்மிகள்”, டைனசோர் எலும்புகள் ஆகியவற்றுடன் உறங்குவதற்கு மக்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. டர்பான் அரும்பொருளகத்தின் ஓர் அருங்காட்சி அரங்கத்தில் இவை வைக்கப்பட்டுள்ளன.  ஒரு  கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ள இரு “மம்மிகளின்” வயது 3000 ஆண்டுகளுக்கு மேல். இது பொதுமக்களுக்கு ஒரு கல்வி அனுபவத்தை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

சீன வரலாற்றையும் பாரம்பரியத்தையும் இளையர்களிடையே இந்தக் காட்சி எடுத்துரைப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *